நவீன வசதிகளுடன் புதிய கேலக்ஸி பாப் ப்ளஸ் ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
நவீன வசதிகளுடன் புதிய கேலக்ஸி பாப் ப்ளஸ் ஸ்மார்ட்போன்!

3ஜி தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்கும் ஆர்வம் அனைவரிடமும் இருக்கத்தான் செய்கிறது. இதனால் சிறந்த 3ஜி தொழில் நுட்பம் கொண்ட கேலக்ஸி பாப் ப்ளஸ் எஸ்-5570i என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டு இருக்கிறது சாம்சங் நிறுவனம். இது ஆன்ட்ராய்டு 2.2 ஃப்ரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

வெர்ஷன் 2.3 அப்கிரேட் வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் சாம்சங் வழங்கும். 3.14 இஞ்ச் அகன்ற திரை வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும். 3.15 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் இதில் புகைப்படம் மற்றும் வீடியோ வசதியினையும் வழங்கும். இந்த நவீன கேமரா 2048 X 1536 பிக்ஸல் துல்லியத்தினை கொடுக்கும்.

வைபை, வி2.1 புளூடூத் ஏ2டிபி போன்ற வசதிகளும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. கியூவல்காம்எம்எஸ்எம் 7227 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. கேலக்ஸி பாப் ப்ளஸ் ஸ்மார்ட்போன் சிறப்பாக இயங்க இதில் 832 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் உள்ளது. சாம்சங் கேலக்ஸி பாப் ப்ளஸ் ஸ்மார்ட்போன் ரூ.9,000 விலை கொண்டதாக இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot