Home
Mobile

மொபைல் மார்கெட்டிற்கு சவாலாக புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

By Super
மொபைல் மார்கெட்டிற்கு சவாலாக புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

தறமான தொழில் நுட்பத்தினை கொடுத்து அசத்தி வரும் சாம்சங் நிறுவனம். கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்களில் சிறந்த பயன்பாடுகளை கொடுத்து வருகிறது. கேலக்ஸி பாக்கெட் ஸ்மார்ட்போன் விலையிலும், வடிவமைப்பிலும் வாடிக்கையாளர்களின் பாக்கெட்டிற்கு கச்சிதமானதாக இருக்கும் என்று நம்பலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் இயங்குதளத்தை கொண்டது.

இதன் 2.8 திரையினை வழங்கும். இந்த திரையின் மூலம் 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் எளிதாக பெறலாம். இதில் கேமரா 2 மெகா பிக்ஸல் உள்ளதால் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் கொடுக்கும். இது 1600x1200 பிக்ஸல் துல்லியம் கொண்டது.

3ஜி நெட்வொர்க் எளிதாக சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் ஜிபிஆர்எஸ், எட்ஜ் தொழில் நுட்பங்கள் இதில் உள்ளதால் பிரவுசிங் வசதியினை பெறலாம்.

ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் வசதினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். இதனால் பொழுதுபோக்கை, இனிமையான பொழுதுபோக்காக மாற்றவும் முடியும்.

எல்ஐ-அயான் 1,200 எம்ஏஎச் பேட்டரி நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த ஆண்டில் கேலக்ஸி பாக்கெட் ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி பாக்கெட் ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவிலும் வெளியாகலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் இதை பற்றிய தகவல்களை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இதன் விலையும் இன்னும் சரிவர வெளியாகவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X