புதிதாக 2 சாம்சங் ஸ்மார்ட்போன்கள்: அமெரிக்காவில் அறிமுகம்

Posted By: Staff

புதிதாக 2 சாம்சங் ஸ்மார்ட்போன்கள்: அமெரிக்காவில் அறிமுகம்
ஒரு நீண்ட காத்திருப்புக்குப் பிறகு அமெரிக்காவில் வெற்றிகரமாக கேலக்ஸி ப்ளேயர் 4.0 மற்றும் 5.0 என்ற ஸ்மார்ட் மொபைல்களை வெளியிட்டிருக்கிறது சாம்சங் நிறுவனம்.

வாடிக்கையாளர்களின் நலன் கருதி ஒவ்வொரு தொழில் நுட்பத்தையும் கொடுத்திருக்கிறது இந்நிறுவனம். இந்த மொபைல் அமெரிக்க மக்களின் ரசனைக்குத் தகுந்தவாரு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மொபைல்களுமே ஆன்ட்ராய்டு பிரையோ 2.2 ப்ளாட்ஃபார்மில் இயங்குகிறது. ஆப்பிள் நிறுவனம் தற்சமயம்தான் ஒரு ஸ்மார்ட்மொபைலை வெளியிட்டு உலக அளவில் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில் சாம்சங் நிறுவனம் இரண்டு மொபைல்களை களத்தில் இறக்கி இருப்பது கடுமையான போட்டியை உருவாக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனம் பெற்ற வெற்றியை சாம்சங் தட்டிப் பறிக்குமா இல்லையா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

இதில் மிக உயர்ந்த டபிள்யூவிஜிஏ டிஎப்டி எல்சிடி திரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு போன்களிலுமே 3.2 மெகா பிக்ஸல் கேமராவும், விஜிஏ முகப்புக் கேமராவும் உள்ளதால் சிறந்த புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங், வீடியோ சாட்டிங் போன்றவைகளை செய்ய பெருமளவில் உதவியாக இருக்கும்.

இந்த இரண்டு மொபைல்களும் 8ஜிபி இன்டர்னல் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. 32ஜிபி மெமரி கார்டு வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.

சிறந்த தொழில் நுட்ப நிபுணர்கள் இதில் சவுன்டு அலைவ் என்ஜினையும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் பொருத்தியுள்ளனர். இதனால் மிகத் துல்லியமாக இசை கேட்டு மகிழ முடியும். கேலக்ஸி 4.0 மற்றும் 5.0 மொபைல்கள் மல்டி ஃபார்மெட் வசதிக்கு வழிவகுக்கிறது. வைபை மூலமாக வீடியோ சாட்டிங் வசதியினை எளிதாகப் பெறலாம்.

பார்ப்பவர்களின் கண்களை அவர்களலேயே நம்ப முடியாது. அத்தகைய உயர்ந்த வேலைப்பாடுகள் கொண்ட 2,500 எம்ஏஎச் பேட்டரி கேலக்ஸி 5.0 மொபைலில் பொருத்தப்பட்டுள்ளது. மியூசிக் ப்ளே பேக்கப் வசதிக்கு இதன் பேட்டரி 60 மணி நேரம் ஒத்துழைக்கிறது. கேலக்ஸி-4.0 மொபைலில் உள்ள 1,200 எம்ஏஎச் பேட்டரி 54 மணி நேரம் ஒத்துழைக்கிறது. கேலக்ஸி-5.0 மொபைலைக் காட்டிலும் சற்று குறைவான நேரத்தைக் கொடுக்கிறது கேலக்ஸி-4.0.

இந்த இரண்டு மொபைல்களும் இந்தியாவில் வெளியாவதைப் பற்றி இதுவரை எந்தத் தகவல்களும் இல்லை. அமெரிக்காவில் இந்த மொபைல்களின் விலை என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை. ஆனால் மொபைல் வர்த்தகத்தில் கைதேர்ந்தவர்கள், கேலக்ஸி 4.0 மற்றும் 5.0 ஆகிய இரண்டு மாடல்களும் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் என்று கூறுகின்றனர்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot