சிறப்பு வசதியோடு விற்பனைக்கு வந்த கேலக்ஸி ஆன் 8: வாங்க நீங்க ரெடியா.!
லேக்ஸி ஆன்8 செல்போன் விலை இந்திய சந்தையை பொறுத்த மட்டும் ரூ. 16 ஆயிரத்து 990க்கு விற்கப்படுகிறது. இந்த போனில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாம்சங் போன் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்திய செல்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதைசமாளிக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும் புதிய மாடல் போன்களை பல்வேறு நிறுவனங்களும் அறிமுகம் செய்து வருகின்றன.
இந்நிலையில் சாம்சங் போன் நிறுவனம் கேலக்ஸி போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதற்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ள நிலையில், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஆன் 8 என்ற புதிய போனை அறிமுகம் செய்துள்ளது.

கேலக்ஸி ஆன் 8:
கேலக்ஸி ஆன்8 செல்போன் இந்த மாதம் 8ம் முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த போனை பிளிப்கார்ட்டிலும் வாங்க முடியும். இந்த போன் 6.0 இன்ச் ஹெச்டி ஆப்பர் அமோல்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த போன் விலை:
லேக்ஸி ஆன்8 செல்போன் விலை இந்திய சந்தையை பொறுத்த மட்டும் ரூ. 16 ஆயிரத்து 990க்கு விற்கப்படுகிறது. இந்த போனில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனை இஎம்ஐயிலும் விற்கப்படுகிறது.

திரை அம்சம்:
கேலக்ஸி ஆன் 8 போனில் திரை 6 இன்ச் ஆகும். திரை விகிதம் 18:5:9 என்று இருக்கும். மேலும், போனில் உள்ள டுயல் கேமராவும் 16 எம்பி உடையது. மேலும் முதன்நிலை சென்சார் எப்/1.9 5எம்பி இரண்டாம் நிலை லென்ஸ் எப்.19 அப்ரேச்சரும் இருக்கிறது. முன் பக்க கேமரா 16 எம்பி 1.9 அப்ரேச்சரும் இருக்கிறது.

64 ஜிபி உள்ளடம்:
சாம்சங் கேலக்ஸி ஆன் 8 போனை ஸ்னாப்டிராகன் 450 பிரோசர் வழங்குகிறது. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க மெமரியும், 256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டுடன் இணைத்து பயன்படுத்த முடியும்

3500 எம்ஏஹெச் பேட்டரி:
கேலக்ஸி ஆன் 8 போன் பேட்டரி 3500 எம்ஏஹெச் இருக்கிறது. ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயக்குகிறது. பிரத்யேகமாக வீடியோ சாட்டிங் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனை சாம்சங் விற்பனை அங்காடியிலும், செல்போன்கடைகளிலும், ஆன்லைனில் பிளிப்காரட்டில் மட்டுமே பெறமுடியும். பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications