பட்ஜெட் விலையில் கேலக்ஸி ஆன்7 பிரைம் அறிமுகம்.!
புதிய கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போனில் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா அமைப்பு 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம், மேலும் பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. இக்கருவி ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. கருப்பு மற்றும் தங்க நிறங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் கேலக்ஸி ஆன்7 பிரைம்.
இப்போது அமேசான் வழியாக இந்த அசத்தலான கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல்கள் கிடைக்கும், இதனுடன் ஜியோ நிறுவனம் ரூ.200-வரை கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

செல்பீ கேமரா:
புதிய கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போனில் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா அமைப்பு 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3/4ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆக்டோ-கோர்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 3,300எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் கருப்பு மற்றும் தங்க நிறங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

விலை:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ள இக்கருவியின் விலை ரூ.12,990-ஆக உள்ளது, மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ள இக்கருவியின் ரூ.14,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications