இந்தியாவில் மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் களமிறங்கும் கேலக்ஸி ஆன் 7 பிரைம்.!

Written By:

ஒருவழியாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஆன் 7 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் இந்தியா இணையத்தளத்தில் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த அறிவிபின் வாயிலாக, இந்தியாவில் வாங்ககிடைக்கும் சிறப்பான ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இதுவும் ஒன்றாக இணையும் என்பது உறுதி.

மிகவும் மென்மையான திறனை வெளிப்படுத்தும் கேலக்ஸி ஆன் 7 பிரைம் பற்றிய சரியான விற்பனை தேதி, விலை அடைப்புக்குறிப்பு போன்ற விவரங்கள் அமேசான் இந்தியா தளத்தில் பட்டியலிடவில்லை என்றாலும் கூட சில முக்கிய குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மிட்-ரேன்ஜ் பட்ஜெட்

மிட்-ரேன்ஜ் பட்ஜெட்

உத்தியோகபூர்வ வார்த்தைகள் இல்லாவிடில்,இந்திய விலை நிர்ணயத்தை பொருத்தமட்டிலும் சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் ஆனது ரூ.15,000/- என்கிற மிகவும் போட்டித்திறன்மிக்க மிட்-ரேன்ஜ் பட்ஜெட் பிரிவில் களமிறங்கலாம்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

அமேசான் இந்தியா பட்டியலின்படி, சாம்சங் கேலக்ஸி ஆன் 7 பிரைம் ஒரு 5.5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்ஸல்) தீர்மானம் கொண்ட டிஸ்பிளே கொண்டிருக்கும். உடன் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சிநோஸ் 7870 செயலி கொண்டு இயங்கும்.

கேமரா

கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில், முன்பக்கமும் பின்பக்கமும் ஒரு 13 மெகாபிக்சல் கேமராக்கள் கொண்டுள்ளது. இரண்டுமே எப் / 1.9 அளவிலான துளை கொண்டிருக்க பின்பக்க கேமரா மட்டும் எல்இடி ஃப்ளாஷ் ஒன்றை கொண்டிருக்கும்.

சேமிப்பு மாறுபாடு

சேமிப்பு மாறுபாடு

இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு என்கிற இரண்டு மாறுபாடுகளில் வெளியாகும். உடன் மைக்ரோ அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய வசதியும் இருக்கும்.

சாம்சங் பே மினி

சாம்சங் பே மினி

கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது மொபைல் வழியிலான பணபரிவர்த்தனைகளுக்கான சாம்சங் பே மினி-க்கு ஆதரவளிக்கும். உடன் காட்சிக்கு கீழே ஒரு வன்பொருள் ஹோம் பொத்தானையம், அதன் பக்கங்களிலும் கெப்பாசிட்டி பொத்தான்களையும் கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

ஐக்கிய அரபு எமிரேட் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், 3300எம்ஏச் பேட்டரி, எல்சிடி டிஸ்ப்ளே பேனல், இரட்டை சிம் செயல்பாடு மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டைக்கான பிரத்யேக ஸ்லாட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

அளவீட்டில் 151.7 x 75 x 8 மிமீ மற்றும் 167 கிராம் எடையும் கொண்டுள்ள இக்கருவி வைஃபை, 4ஜி, ப்ளூடூத் 4.1, ஏன்ட் +, மைக்ரோ- யூஎஸ்பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டு அறியப்படாத ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும்.

வண்ண விருப்பங்கள்

வண்ண விருப்பங்கள்

கருப்பு மற்றும் தங்க வண்ண விருப்பங்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் ஆனது இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பதில் தெளிவில்லை என்றாலும், நாளை (புதன்கிழமை) புது டெல்லியில் சாம்சங் நிறுவனம் வழங்கும் நிகழ்ச்சியொன்று நடக்கவுள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ8 + (2018) அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி ஏ8 + (2018) அறிமுகம்

நடைபெறும் நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி ஏ8 + (2018) அறிமுகம் செய்யப்பட்டு ஒன்ப்ளஸ் 5டி மற்றும் நோக்கியா 8 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கான போட்டி ஆரம்பித்து வைக்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு மற்றும் விற்பனை போன்றே அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Samsung Galaxy On7 Prime Goes Official, Coming Soon to India via Amazon. Read more about this in Tamil Gizot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot