Home
Mobile

இந்தியா: பட்ஜெட் விலையில் புதிய கேலக்ஸி ஆன்6 அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்த்த கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி ஆன்6:

கேலக்ஸி ஆன்6:

சாம்சங் கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.6-இன்ச் எச்டி பிளஸ் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1480 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போனில் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்தஆன்6 ஸ்மார்ட்போன்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும்; எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:

விலை:

சாம்சங் கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும்
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,490-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy On6 with Infinity display launched in India for Rs 14,490 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X