சிக்கலில் சிக்கத் தவித்த சாம்சங்கிற்கு புதிய சிக்கல்??

By Meganathan
|

சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடித்து, பின் அவற்றை அந்நிறுவனம் திரும்பப் பெற்றது. இந்த பிரச்சனையைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் மீண்டும் பழைய உற்சாகத்துடன் களமிறங்க முடிவு செய்து தனது முடிவினை நீட்டித்துள்ளது.

நேற்று அறிமுகமான சாம்சங் கேலக்ஸி On Nxt கருவியின் லிற்பனை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. சாம்சங் புதிய கருவியின் புதிய வெளியீட்டுத் தேதி மற்றும் அதன் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போமா..

அறிமுகம்

அறிமுகம்

சாம்சங் ஃபிளாக்ஷிப் கருவி எதிர்பாராத முடிவினை சந்தித்து இருக்கும் நிலையில் அந்நிறுவனம் பட்ஜெட் விலையில் தனது புதிய கருவிகளை அறிமுகம் செய்வது விற்பனை துவங்க இருந்தது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புதிய தேதி

புதிய தேதி

பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் நேற்று (20.10.2016) இரவு சரியாக 8.00 மணிக்கு விற்பனை துவங்க இருந்த கருவியானது தற்சமயம் அக்டோபர் 23, 23.59 மணிக்கு துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கருவி

புதிய கருவி

புதிய சாம்சங் கேலக்ஸி On Nxt கருவி பார்க்க கேலக்ஸி On 7 (2016), போன்றே காட்சியளிக்கின்றது. புதிய கருவியின் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போமா..

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

சாம்சங் On Nxt கருவியில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2.5D கொரில்லா கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர்

பிராசஸர்

கேலக்ஸி On Nxt போனில் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் SoC மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 32 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 256 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்பெக்ஸ்

ஸ்பெக்ஸ்

டூயல் நானோ சிம் கால்டு ஸ்லாட் கொண்ட கேலக்ஸி On Nxt கருவியானது 3300 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதன் மூலம் சுமார் 21 மணி நேர 3ஜி டாக்டைம், 15 மணி நேரத்திற்கு எல்டிஇ இண்டர்நெட் பயன்பாடு ஏற்ற பேக்கப் வழங்குகின்றது.

கேமரா

கேமரா

சாம்சங் கேலக்ஸி On Nxt கருவியில் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா, f/1.9 அப்ரேச்சர் வழங்கப்பட்டுளஅளது. பிரைமரி கேமராவுடன் பிளாஷ் மற்றும் ஃபுல் எச்டி தரம் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறன் வழங்கப்பட்டுள்ளது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.1, வை-பை 802.11n, வை-பை டைரக்ட் மற்றும் ஹோம் பட்டனில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இத்தனை அம்சங்கள் கொண்ட கருவியின் இந்திய விலை ரூ.18,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நிறம்

நிறம்

கோல்டு மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும் புதிய சாம்சங் கேலக்ஸி On Nxt கருவி லெனோவோ நிறுவனத்தின் Z2 Plus கருவியுடன் நேரடி போட்டியாக விளங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. லெனோவோ Z2 Plus கருவி இந்தியாவில் ரூ.17,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அச்சம்

அச்சம்

முந்தைய சாம்சங் கருவி வெடித்ததைத் தொடர்ந்து புதிய கருவியாவது வெடிக்காமல் இருக்க வேண்டும் என்பதே சாம்சங் நிறுவனம் மற்றும் அதன் பயனர்களின் மன நிலையாக இருக்கின்றது. புதிய கருவியை நம்பலாமா பாஸ்.??

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy On Nxt Launched in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X