ரூ.17கே பட்ஜெட்டில் கேலக்ஸி ஆன் மேக்ஸ்: நம்பி வாங்க 7 காரணங்கள்.!

|

இந்தாண்டு வெளியான சாம்சங் கருவிகளை ஒட்டுமொத்தமாக பார்த்தால், சாம்சங் தன்னையொரு வெகுஜனங்களுக்கான பிராண்டாக நிலைநிறுத்துக்கொண்டதை உணர முடிகிறது. மிட்-ரேன்ஜ் பிரிவில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பெரும்பான்மை வகிப்பதோடு, வெற்றிகரமான தொலைபேசிகளையும் கொண்டுள்ளதே அதற்கு ஆதாரம்.

ரூ.17கே பட்ஜெட்டில் கேலக்ஸி ஆன் மேக்ஸ்: நம்பி வாங்க 7 காரணங்கள்.!

அதிலும் குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் ஜே தொடரின் கீழ் வெளியான கருவிகள் "சக்கை போடு போடுகின்றது" என்றே கூறலாம். அதனை தொடர்ந்து கேலக்ஸி ஆன் தொடரானது சியோமி, மோட்டோரோலா, ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்களின் சந்தை ஆதிக்கம் மிக்க கருவிகளை குறிவைத்து வெளியானது.

ஒரு ஆற்றல்மிக்க ஆண்ட்ராய்டு நௌவ்கட் ஸ்மார்ட்போன்

ஒரு ஆற்றல்மிக்க ஆண்ட்ராய்டு நௌவ்கட் ஸ்மார்ட்போன்

அந்த வரிசையில் வெளியான மிகச்சிறந்த ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஆன் மேக்ஸ் பார்க்கப்படுகிறது. ரூ.16,990/- என்ற விலை நிர்ண்யத்தில் இந்தியாவில் வாங்க கிடைக்கும் இக்கருவி ஒரு ஆற்றல்மிக்க ஆண்ட்ராய்டு நௌவ்கட் ஸ்மார்ட்போன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

17கே என்ற பட்ஜெட்டில் கிடைக்கும்

17கே என்ற பட்ஜெட்டில் கிடைக்கும்

ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது வலுவான செயல்திறன், ஒரு நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் கணிசமான திறன் கொண்ட பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 17கே என்ற பட்ஜெட்டில் கிடைக்கும் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஆனது உங்கள் எதிர்பார்ப்புகளை விட அதிகமான முக்கிய அம்சங்களை வழங்குகிறது. ஆனால் பெரிய கேள்வி என்னவென்றால் - இதை நம்பி வாங்கலாமா.?

ஒரு பளபளப்பான கண்ணாடி வடிவமைப்பு

ஒரு பளபளப்பான கண்ணாடி வடிவமைப்பு

கேலக்ஸி ஆன் மேக்ஸ் நிறுவனத்தின் முந்தைய வடிவமைப்பு பாணியிலான - மையத்தில் உள்ள - ஹோம் பொத்தான் இப்போது ஒரு கைரேகை ரீடராகவும் இரட்டை பணியாற்றுகிறது. இந்த தொலைபேசி ஒரு கவர்ச்சியான உணர்வை கொடுக்கும் நோக்கத்திலான அலுமினிய சட்டம் மற்றும் வட்ட விளிம்புகள் பொருத்தப்பட்ட ஒரு பளபளப்பான கண்ணாடி வடிவமைப்பை பெற்றுள்ளது.

பின்புறத்தில் உலோக வடிவமைப்பு

பின்புறத்தில் உலோக வடிவமைப்பு

மொத்தத்தில் ஒரு பளபளப்பான உணர்வு மற்றும் ஒரு வசதியான பிடிமானம் கொண்ட ஸ்மார்ட்போனாக இது திகழ்கிறது. கண்ணாடி உடல் வடிவமைப்பு என்பதால் இதன் பாதுகாப்பின் மீது சந்தேகம் கொள்ள வேண்டாம். இதன் பின்புறம் ஒரு உலோக வடிவமைப்பை பெற்றுள்ளது. எனினும், தொலைபேசியின் மேல் மற்றும் கீழ் பகுதிகள் பிளாஸ்டிக் கொண்டு செய்யபட்டுள்ளது.

ஒரு நம்பமுடியாத திரை

ஒரு நம்பமுடியாத திரை

இக்கருவியின் போட்டியாளர்கள், 18: 9 எக்னகிற புதிய காட்சி விகித்திற்கு மாறினாலும், சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸில், அதன் வழக்கமான பரந்த பெஸல்கள் கொண்ட 16: 9 என்கிற திரை விகித்தையே பின்பற்றுகிறது. மேலும் இதன் டிஸ்பிளே ஒரு அமோஎல்இடி வகை இல்லை என்றாலும் கூட, 5.7 அங்குல மற்றும் 1920 x 1080 பிக்சல்கள் அளவிலான ஒரு நம்பமுடியாத திரையை கொண்டுள்ளது.

தொலைபேசியின் வலது விளிம்பில் ஸ்பீக்கர்

தொலைபேசியின் வலது விளிம்பில் ஸ்பீக்கர்

ஒரு மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனிற்கு தேவையான தெளிவு மற்றும் போதுமான அளவு ஆகிய இரண்டுமே சற்று அதிகமாகவே கேலக்ஸி ஆன் மேக்ஸ் கொண்டுள்ளது என்பது நிதர்சனம். இதன் ஸ்பீக்கர் தொலைபேசியின் வலது விளிம்பில் இடம்பெற்றுள்ளது. பெரும்பாலான பயனர்கள் மொபைலை லேண்ட்ஸ்கேப் நோக்குநிலையில் வைத்துத்தான் வீடியோக்களையும், திரைப்படங்களையும் பார்ப்பார்கள் என்பதால் இந்த வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிக அசாதாரணமான கேமராத்துறை

மிக அசாதாரணமான கேமராத்துறை

ஒரு மிட்ரேன்ஜ் சாதனமான இக்கருவியின் கேமராத்துறையை மிக அசாதாரணமானது என்றே கூறலாம். எப்/1.7 துலையுடனான ஒரு 13எம்பி பின்பக்க கேமரா கொண்டுள்ளது. இது கேலக்ஸி எஸ்7 மற்றும் எஸ்8 கருவிகளில் காணப்படும் கேமராவாகும். ஆச்சரியப்படத்தக்க வகையில், கேலக்ஸி ஆன் மேக்ஸ் குறைந்த-ஒளி சூழ்நிலைகளை மிகவும் சிறப்பான புகைப்படங்களை கைப்பற்ற உதவுகிறது.

விதிவிலக்கான மதிப்பு

விதிவிலக்கான மதிப்பு

இதை ஒரு மிட் ரேன்ஜ் கருவி என்று நம்புவதே கடினம் தான். மொத்தத்தில், ரூ 20,000/-க்குள் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்க நீங்கள் திட்டமிட்டுருந்தால் சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஆனது விதிவிலக்கான மதிப்பை வழங்குகிறது என்பது உறுதி.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy On Max priced at Rs 16,990 in India; smartphone has unexpected features. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X