அட்டகாச அறிவிப்பு: ரூ.27,500 தள்ளுபடி- சாம்சங் கேலக்ஸி நோட் 10 வாங்க சரியான நேரம்!
சாம்சங் கேலக்ஸி நோட் 10 மாடல் ஸ்மார்ட்போனுக்கு ஆஃப்லைன் கடைகளில் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதன்மை ரக ஸ்மார்ட்போனுக்கு ரூ.27,500 வரை தள்ளுபடி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10
சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முதன்மை ரக மாடல்களின் ஒன்றான சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட போது இதன் விலை ரூ.69,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு நிறுவனத்தின் ஆஃப்லைன் கடைகளில் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஃப்லைன் கடைகளில் தள்ளுபடி
சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனுக்கு ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்து பார்க்கலாம். இந்தியாவின் ஆஃப்லைன் கடைகளில் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ரூ.27,500 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை அறிவிப்பு
இதுகுறித்த 91 மொபைல்ஸ்-ன் அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் கடைகளில் மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும் எனவும் ஆன்லைன் வலைதளங்களில் தள்ளுபடி கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய விலைப்படி இந்த ஸ்மார்ட்போன் ரூ.45,000-த்துக்கு கிடைக்கிறது. அனைத்து வண்ண விருப்பங்களும் இந்த தள்ளுபடி விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மூன்று வண்ண விருப்பங்கள்
கேலக்ஸி நோட் 10 ஆரா பிளாக், ஆரா ரெட் மற்றும் ஆரா க்ளோ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி இகாமர்ஸ் தளங்களிலும் கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மகிப்பெரிய தள்ளுபடி என்பதால் இகாமர்ஸ் தளங்களிலும் விரைவில் அறிவிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10: அம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி நோட் 10 இன்-ஹவுஸ் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9825 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு விருப்பத்துடன் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான தனிப்பயன் ஒன்ஐஐ திரையில் இயங்குகிறது. அதேபோல் 6.3 இன்ச் FHD+ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே இதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

மூன்று ரியர் கேமரா அமைப்பு
கேலக்ஸி நோட் 10 மூன்று ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இது 12 எம்பி பிரைமரி சென்சார், 16 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 12 எம்பி டெலிஃபோட்டோ சென்சார் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 10MP செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் 3,500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி வேகமாக சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 வாங்க சரியான வாய்ப்பு
கேலக்ஸி நோட் 10 இந்திய சந்தையின் முதன்மை ரக ஸ்மார்ட்போன்களின் பிரதான ஒன்றாகும். நோட் 10 ஸ்மார்ட்போனின் அடுத்த தலைமுறை சாதனமாக நோட் 20 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவும் முதன்மை ரக ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு சாம்சங் கேலக்ஸி நோட் 10 வாங்க சரியான வாய்ப்பு இதுவாகும்.


Click it and Unblock the Notifications