3 மில்லியன் கேலக்ஸி நோட்-2 யூனிட்கள் விற்பனை!

|

3 மில்லியன் கேலக்ஸி நோட்-2 யூனிட்கள் விற்பனை!

கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் இதுவரை 30 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கேல்கஸி நோட்-2 ஃபேப்லட் சமீபத்தில் தான் வெளியிடப்பட்ட ஒரு ஃபேப்லட். அந்த வகையில் இந்த ஃபேப்லட் விற்பனையில் 30 லட்சத்தினை தொட்டிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் ஒரு விஷயம் தான்.

தென் கொரியா, அமெரி்க்கா போன்ற நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இரண்டு மாதத்தில் சாம்சங் நிறுவனத்தின் இந்த கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் அதிக அளவு விற்பனையை தொட்டிருப்பது மகிழ்ச்சி கொள்ள வேண்டிய விஷயம் தான்.

இந்த இடத்தில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது. சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பாக கால்பதிக்க கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அந்த வகையில் கேல்கஸி நோட்-2 ஃபேப்லட்டும் இப்போது பின்தொடர்கிறது என்று சொல்லலாம்.

5 இஞ்ச் திரை கொண்ட இந்த கேல்கஸி நோட்-2 ஃபேப்லட் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் வழங்குவதாக இருக்கும். இந்த ஃபேப்லட் வாடிக்கையாளர்களை ஈர்க்க ஒரு முக்கிய காரணமாக இதன் எஸ்-பென் வசதியினை குறிப்பிடலாம்.

அதிலும் கேலக்ஸி நோட் ஃபேப்லட்டும் எஸ்-பென் வசதியினை கொண்டதாக இருந்தது. அந்த வகையில் கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டில் இருக்கும் எஸ்-பென் நிறைய நவீன வசதிகளையும் வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல மேம்படுத்தப்பட்ட வகையில் நிறைய வசதிகளை கொண்டதால் இந்த ஃபேப்லட் இன்னும் அதிக விற்பனையை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X