இன்று அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி நோட் II
oi
-Karthikeyan
By Karthikeyan

ஆப்பிள் நிறுவனத்திற்கு கடும் போட்டியைக் கொடுத்து வரும் சாம்சங் இன்று பெர்லினில் நடைபெறவிருக்கும் ஒரு முக்கிய நிகழ்வில் தனது புதிய கோலக்ஸி நோட் II என்ற பாப்லெட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த பாப்லெட்டைப் பற்றியத் தகவல்களை சாம்சங் மிக ரகசியமாக வைத்திருந்தது. ஆனால் அதற்குள் இந்த ரகசியத்தை ஒரு கொரிய செய்தித்தாள் வெளியில் கசியவிட்டிருக்கிறது.
அந்த செய்தித்தாளின்படி இந்த சாம்சங் பாப்லெட் பல ஏராளமான தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த சாதனம் 5.5 இன்ச் திரையுடன் வருகிறது. அதோடு இந்த பாப்லெட் 1.4 ஜிஹெர்ட்ஸ் எக்ஸினோஸ் க்வாட் ப்ராசஸர் கொண்டிருப்பதால் மிக வேகமாக இயங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
8எம்பி கேமராவுடன் வரும் இந்த பாப்லெட் 16ஜிபி மற்றும் 32ஜிபி அளவுகளில் சேமிப்பைக் கொண்டிருக்கிறது. மேலும் 3ஜி இணைப்பு வசதியையும் இந்த பாப்லெட் தாங்கி வருகிறது. மிகவும் முக்கியமாக இந்த பாப்லெட் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்குகிறது.
இந்த தகவல்கள் அனைத்தையும் இன்று சாம்சங் பெர்லினில் நடக்கும் விழாவில் உறுதிப்படுத்தும் என்று நம்பலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications