Home
Mobile

கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனின் புதிய அப்டேஷன்!

By Super
கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனின் புதிய அப்டேஷன்!

சிறப்பான தொழில் நுட்பத்தினை கொண்டதற்காக சாம்சங் கேலக்ஸி நோட் வாடிக்கையாளர்களின் கவனத்தினை அதிகம் ஈர்த்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனுக்கு இப்போது ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் அப்டேஷனை வழங்குகிறது சாம்சங்.

ஏற்கனவே சிறப்பான தொழில் நுட்பங்களை தருவதன் மூலம் அதிக வரவேற்பு பெற்ற இந்த ஸ்மார்ட்போன், இனி ஐசிஎஸ் அப்டேஷனையும் பெறுவதால், இனி மக்களிடையே இதன் மவுசே தனி தான்.

மின்னணு சாதனங்களை வாங்க வேண்டும் என்றால், முதலில் கேட்கப்படுவது, அதன் இயங்குதளம் பற்றிய விவரங்கள் தான். அந்த வகையில் அதிகமான வாடிக்கையாளர்கள் விரும்புவது ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம்.

5.3 இஞ்ச் அகன்ற திரை வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 800 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும். இதன் மூலம் சூப்பர் அமோலெட் தொடுதிரை தொழில் நுட்பத்தினையும் பெறலாம். இந்த பெரிய திரைக்கு கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கவசமும் கொடுக்கப்பட்டுள்ளது.

8 மெகா பிக்ஸல் கேமராவுடன், இதில் 2 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. இதன் 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் எளிதாக 3264 X 2448 பிக்ஸல் துல்லியத்தினையும் பெறலாம். 3ஜி மற்றும் 4ஜி தொழில் நுட்பத்திற்கு சிறப்பாக சப்போர்ட் செய்ய இதில் 2,500 எம்ஏஎச் பேட்டரியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இத்தனை அதிக தொழில் நுட்பங்களை வழங்கும் கேலக்ஸி நோட் இனி ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் கொடுக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X