Just In
- 12 min ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
- 26 min ago
அடேங்கப்பா..செம்மையா இருக்கு: ஆன்லைனில் கசிந்த புதிய சாம்சங் 5G போனின் புகைப்படம்.!
- 2 hrs ago
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- 2 hrs ago
ரூ.16,000-க்கு கீழ் அசத்தலான 40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க விருப்பமா? இதோ பட்டியல்.!
Don't Miss
- News
"நேரடி மோதல்" ஓபிஎஸ் அணி வேட்பாளர் யார்? மாலையில் நல்ல செய்தி சொல்லப்படும்.. வைத்திலிங்கம் அப்டேட்!
- Lifestyle
இந்திய ஆண்களுக்கு விந்தணு தரம் மற்றும் எண்ணிக்கை குறைய இந்த 5 விஷயங்கள்தான் முக்கிய காரணமாம்...!
- Automobiles
டொயோட்டாக்கு ஷாக் வைத்தியம் கொடுத்த இந்தியர்கள்.. நம்மாலையே நம்ம முடியல டொயோட்டாக்கு மட்டும் எப்படி இருக்கும்!
- Finance
பர்ஸ்-ஐ பதம் பார்த்த பட்ஜெட் 2023 அறிவிப்புகள்.. அட பாவமே..!
- Sports
"இன்னும் ஒரே ஒரு போட்டிதான்.. சுப்மன் கில்லால் இந்தியாவுக்கு ஆபத்து".. பாக். சீனியர் எச்சரிக்கை!
- Movies
கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய அடுத்த பிரபலம்... அதிர்ச்சியில் படக்குழு!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
புதிய ஐபோனுடன் யுத்தத்திற்கு தயாராகும் சாம்சங் கேலக்ஸி நோட்!

போட்டி என்றால் இது போட்டி என்று அனைவரையும் சொல்ல வைக்கும் போல் தெரிகிறது 2 சூப்பர் ஸ்மார்ட்போன்கள். ஐபோன் 4-எஸ், சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்கள் தான் அந்த சூப்பர் மொபைல்கள்.
வாடிக்கையாளர்களை தனது புதிய வசதிகளையும், தொழில் நுட்பங்களையும் கொடுத்து அசத்திய ஆப்பிள் ஐபோன்-4 எஸ் ஸ்மார்ட்போனுக்கு, கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் சிறந்த போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் 16எம் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் சூப்பர் அமோல்டு தொடுதிரை வசதி கொண்டது. ஐபோன்-4 எஸ் எல்இடி பேக்லிட் டிஎப்டி திரை கொண்டது. ஆப்பிள் ஐபோன்-4 எஸ் 3.5 இஞ்ச் திரையை வழங்கும். ஐபோன்-4 எஸ் ஸ்மார்ட்போனை ஒப்பிட்டு பார்க்கையில் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் 5.3 இஞ்ச் அகன்ற திரை வசதியினை தரும்.
இந்த 2 ஸ்மார்ட்போன்களும் 8 மெகா பிக்ஸல் கேமராவினை தான் கொடுக்கும். ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் கேமராவிலும் சில தொழில் நுட்ப வேறுபாடுகள் இருக்கின்றது. ஐபோன்-4 எஸ் ஸ்மார்ட்போனில் ஆட்டோ ஃபோக்கஸ், லெட் ஃப்ளாஷ் வசதி உள்ளது. கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனில் ஃபேஸ் மற்றும் ஸ்மைல் டிடெக்ஷன், ஆட்டோ ஃபோக்கஸ் போன்ற வசதிகளை பெற முடியும்.
இந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் இருக்கும் 8 மெகா பிக்ஸல் கேமராக்கள், 3263 X 2448 பிக்ஸல் துல்லியத்தினை வழங்கும். அது மட்டும் அல்லாது இந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் முகப்பு கேமரா உள்ளது. அதில் ஐபோன்-4 எஸ் ஸ்மார்ட்போனில் விஜிஏ கேமராவும், சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனில் 2 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது.
2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் பயன்பாடுகள் பற்றி கவலையே இல்லை. சாம்சங் கேலக்ஸி, ஆப்பிள் ஐபோன்-4 எஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் 2ஜி மற்றும் 3ஜி வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.
இப்படி மொபைல் நாயகன் என்று பெயரெடுத்த ஐபோன்-4 எஸ் ஸ்மார்ட்போனுக்கு, கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் ரூ.35,000 விலையில் இருந்து ஆரம்பமாகிறது.
சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் ரூ.31,000 ஒட்டிய விலையில் கிடைக்கும். மொபைல் சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் பற்றிய பேச்சு அதிகமாக இருக்கிறது. ஏனெனில் இதன் தொழில் நுட்பம் அப்படி முக்கிய இடம் பிடிக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470