வைரல் வீடியோ: சாம்சங் கேலக்ஸி நோட் 9 / 512 ஜிபி இன்பில்ட் மெமரியா.!
சாம்சங் கேலக்ஸி நோட் 9 இன் இரண்டாவது டீஸர் வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 9 இன் இரண்டாவது டீஸர் வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 9 இன் முதல் வீடியோ டீஸரை சில மாதங்களுக்கு முன்னாள் வெளியிட்டது, அதில் சிறந்த பேட்டரி லைப்டைம் பற்றி பெருமையாக பேசியது சாம்சங் நிறுவனம்.
இப்போது, யூடியூப் இல் மற்றொரு 30 விநாடி வீடியோ வைரல் ஆகியுள்ளது. இதில் கேலக்ஸி நோட் 9 அதிகமான சேமிப்பு இடத்தை தருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் பிரதான யூடியூப் சேனலால் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

போதுமான ஸ்டோரேஜ் இல்லையா?
சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் போன் 64ஜிபி,128ஜிபி மற்றும் 256ஜிபி மெமரி வேரியண்ட்களில் வெளிவந்தது. இப்பொழுது வைரல் ஆகியுள்ள வீடியோ டீசரில் "'போதுமான ஸ்டோரேஜ் இல்லையா? ஒரு நாளில் நிறைய மாற்ற முடியும்" என்று இறுதியில் செய்தி வருகிறது. இந்த புதிய டீஸர் கேலக்ஸி நோட் 9, 512 ஜிபி மாடலாக இருக்கக்கூடும் என்று சாம்சங் வாடிக்கையாளர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்டோரேஜ் 2TB
கேலக்ஸி நோட் 8, 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டுக்கு ஆதரவளிக்கிறது எனவே கேலக்ஸி நோட் 9 இல் மைக்ரோ எஸ்டி ஸ்டோரேஜ் 2TB க்கு வழங்குவதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது.

5 வது ஜெனெரேஷன் "ஹை பேர்பார்மன்ஸ்"
சாம்சங் சமீபத்தில், 5 வது ஜெனெரேஷன் "ஹை பேர்பார்மன்ஸ்" ஸ்டோரேஜ் சிப்-களை உற்பத்தி செய்வதை உறுதிப்படுத்தியது. சாம்சங் துவக்க நிலையில் இந்த சிப்-கள் சூப்பர்கம்ப்யூட்டிங் நிறுவனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட நிறுவனங்களால் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் என்று முன்பே அறிவித்திருந்தது.

ஆகஸ்ட் 9 இல் சாம்சங் கேலக்ஸி நோட் 9
இந்த 5 வது ஜெனெரேஷன் வி-நாண்ட் மெமரி சிப்-கள் எந்த மாடல் ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யப்படும் என்ற குறிப்பு நம்மிடம் இல்லை என்றாலும், இது பெரும்பாலும் கேலக்ஸி நோட் 9 இல் அறிமுகம் செய்யபடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஆகஸ்ட் 9 இல் வெளியிடப்படும் என்று வீடியோவில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications