இந்தியா: ஐபோனை மிஞ்சும் விலையில் கேலக்ஸி நோட் 9 அறிமுகம்.!
சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் 6ஜிபி /8ஜிபிரேம் மற்றும் 128ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி ஆரவுடன் வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்த
சாம்சங் நிறுவனம் ஐபோனை மிஞ்சும் விலையில் கேலக்ஸி நோட் 9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் 512ஜிபி மெமரி மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு அம்சங்கள்
இதில் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது, தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஐரிஸ் சென்சார், கைரேகை சென்சார் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, பிக்ஸிபி அசிஸ்டண்ட் சேவை மற்றும் பல்வேறு அம்சங்களளை கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி நோட் 9:
சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் குவாட் எச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்ப இடம்பெற்றுள்ளது, அதன்பினபு 2960×1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சம் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:
சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் 6ஜிபி /8ஜிபிரேம் மற்றும் 128ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி ஆரவுடன் வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தில் AKG டியூன் செய்த ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சவுன்டு சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்பு எஸ் பென் (S Pen) ஆதரவுடன் இக்கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எமோஜி மெஷின் லெர்னிங்
சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் ஏ.ஆர் எமோஜி மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, இது முகத்தில் உள்ள 100-க்கும் அதிக முக நுனுக்கங்களை கண்டறிந்து 3டி மாடல் ஒன்றை உருவாக்கி உங்களது முகபாவனைகளை உருவாக்குகிறது. மேலும் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9810 செயலி இடம்பெற்றுள்ளது.

கேமரா
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி+12எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளர், மேலும் இதில் உள்ள இரண்டாவது பிரைமரி கேமராவில் சூப்பர் ஸ்லோ-மோ வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.1 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

விலை:
6ஜிபி கொண்ட கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.67,900-ஆக உள்ளது, அதன்பின்பு 8ஜிபி ரேம் கொண்ட இக்கருவியின்
விலை ரூ.84,900-ஆக உள்ளது. பின்பு வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் பிளிப்கார்ட், பேடிஎம், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் போன்ற தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications