4000mAh பேட்டரி; 6.4 இன்ச் டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 9.!

ஆப்பிள் ஐபோன்களுக்கே சவாளாக திகழும் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடான ஒன்ப்ளஸ் 6 உடன் கடுமையாக போட்டியிடுமா.? என்பது தான் எழும் கேள்விகள்.

|

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைமை ஸ்மார்ட்போன் ஆன, கேலக்ஸி நோட் 9 என்பதில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால் அது என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்.? ஆப்பிள் ஐபோன்களுக்கே சவாளாக திகழும் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடான ஒன்ப்ளஸ் 6 உடன் கடுமையாக போட்டியிடுமா.? என்பது தான் எழும் கேள்விகள்.

அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வண்ணம், ஒரு சுவரசியமான கேலக்ஸி நோட் 9 லீக்ஸ் தகவல் வெளியாகியுள்ளது. அதன் வழியாக கூறப்படும் ஸ்மார்ட்போனின் 2 முக்கிய அம்சங்கள் வெளிபட்டுள்ளது. முதலாவதாக, கேலக்ஸி நோட் 9 ஆனது ஒரு 6.4 இன்ச் க்வாட் எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ளது. அதாவது கேலக்ஸி நோட் 8-ல் காணப்பட்ட 6.3 இன்ச் டிஸ்பிளேவை விட பெரிய டிஸ்பிளே கொண்டுள்ளது.

பெரிய பேட்டரி.!

பெரிய பேட்டரி.!

இரண்டாவதாக வெளியான லீக்ஸ் தகவலின்படி, கேலக்ஸி நோட் 9 ஆனது ஒரு பெரிய பேட்டரி திறனை கொண்டிருக்கும். அதாவது ஒரு 3850mAh பேட்டரி அல்லது ஒரு 4000mAh அலகு கொண்டிருக்கும். டிஸ்பிளே அளவு சார்ந்த விவரமானது விபோ தளம் வழியாகவும், பேட்டரி அளவு சார்ந்த விவரம் சாம்சங் டிவைஸ் டிப்ஸ்டர் ஆன ஐஸ் யுனிவர்ஸ் ட்வீட்டர் தளம் வழியாகவும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இடையே உள்ள வித்தியாசம்.!

இடையே உள்ள வித்தியாசம்.!

நோட் 9 ஸ்மார்ட்போனின் பெரிய ஸ்கிரீன் அளவைப்பற்றி, பல பயனர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஏனெனில், பெரிய டிஸ்பிளே என்பது சாம்சங் கேலக்ஸி எஸ்9+ மற்றும் நோட் 9 ஆகியவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசத்தை விளிம்பில் காட்டும். மறுகையில், ஸ்மார்ட்போனின் பேட்டரி அளவு மீதான அதிகரிப்பும் வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது.

எதிர்பார்த்ததை விட விரைவில் வெளியாகும்.!

எதிர்பார்த்ததை விட விரைவில் வெளியாகும்.!

ஏனெனில், சாம்சங் நிறுவனத்தின் முதன்மை சாதனங்கள் அடிக்கடி மோசமான பேட்டரி செயல்திறன் வெளிப்படுத்துவதும், முக்கியமாக எக்ஸிநோஸ் வேரியண்ட்கள் பெரிய அளவிலான விமர்சங்களை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஆனது நாம் எதிர்பார்த்ததை விட விரைவில் வெளியாகும் என்றே தோன்றுகிறது.

ஜூன் மாதத்திலேயே.!?

ஜூன் மாதத்திலேயே.!?

கேலக்ஸி எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன்களின் மோசமான விற்பனை காரணமாக, வருகிற ஜூன் மாதத்திலேயே வெளியானாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை பொறுத்தவரை வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இது டிஸ்பிளேவில் உட்பொதிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் கொண்டு வருமென ஒரு அறிக்கை கூற, மற்றொன்று இன்-பில்ட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் கொண்டிருக்காது என்கிறது.

இன்-டிஸ்ப்ளே பயோமெட்ரிக் சென்சார்.?

இன்-டிஸ்ப்ளே பயோமெட்ரிக் சென்சார்.?

சாம்சங் நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே பயோமெட்ரிக் சென்சார் தொழில்நுட்பமானது, அதன் ஆரம்ப கட்டங்களில் இருப்பதால் இடம்பெறாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் விவோ மற்றும் ஹூவாய் ஸ்மார்ட்போன்களில் இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே உள்ளதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வேரியபிள் அப்பெர்ஷர் கேமராக்கள்.!

வேரியபிள் அப்பெர்ஷர் கேமராக்கள்.!

இதர அம்சங்களை பொறுத்தவரை, ஸ்னாப்டிராகன் 845 SoC அல்லது Exynos 9810 SoC (இந்திய சந்தை), ஒரு மேம்படுத்தப்பட்ட 'எஸ் பென்', வேரியபிள் அப்பெர்ஷர் கேமராக்கள், நிச்சயமாக ஆண்ட்ராய்டு ஓரியோ போன்றவைகள் இடம்பெறும். மேலும் பல நோட் 9 பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன்இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 9 Rumoured to Feature a 6.4-inch Display and 4000mAh Battery. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X