கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கபோகும் புத்தம் புதிய அப்டேட்.!
சாம்சங் கேலக்ஸி நோட் 9 யுஐ 2.0 உடன் நிலையான ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பைப் பெறுகிறது,இப்போது பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது,விரைவில் அனைத்து கேலக்ஸி நோட் 9 அப்டேட் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்..

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இல் 6.4 இன்ச் 18:5:9 விகித குவாட் ஹெச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளேயுடன் கூடிய 2690 x 1080 பிக்சல் மற்றும் 516ppi பிக்சல் அடர்த்தி கொண்ட தொடுதிரை வசதியுடன் வருகிறது.
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அட்ரினோ 630 ஜிபியு மற்றும் ஆக்டா கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர் மாலி G72MP18 ஜிபியு வுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இயங்குகிறது.
6 ஜிபி ரேம் 128 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் 512 ஜிபி உள் சேமிப்பு என இரண்டு வேரியண்ட் மாடல்களில் கிடைக்கிறது. இத்துடன் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1டிபி வரை சேமிப்பை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.
12 எம்பி பிரைமரி கேமரா f/2.4-f/1.5 அப்பேர்ட்ச்சர் உடன் 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா f/2.4 அப்பேர்ட்ச்சர் கொண்ட டூயல் கேமராயுடன் 8 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா f/1.7 அப்பேர்ட்ச்சர் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷுடன் வருகிறது. 960fps சூப்பர் ஸ்லோ-மோஷான் ரெகார்டிங் மற்றும் புள் எச்டி ரெகார்டிங் இதில் உள்ளது. வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68) தரச்சான்று பெற்றது.

4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் சேவை, வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 9 வருகிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர் டால்பி அட்மோஸ் ஆடியோ சேவையுடன், சிங்கிள் மற்றும் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் 4ஜி வோல்ட்இ சேவையுடன் வருகிறது. இத்துடன் வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி 3.1 இதர சேவைகளும் இதில் உள்ளது


Click it and Unblock the Notifications