மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி நோட் 9 அறிமுகம்: (விலை & அம்சங்கள்).!
சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி ஆரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் இன்று கேலக்ஸி நோட் 9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறது, குறிப்பாக இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இரவு 8.30மணி அளவில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்றவை இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மட்டும் தான் சற்று உயர்வாக இருக்கிறது. அதன்பின்பு
எஸ் பென் (S Pen) ஆதரவுடன் இக்கருவி வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி ஆரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 845;
இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் தொழில்நுட்பத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அமைப்பு மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள் மற்றும் கேமரா
இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு கேலக்ஸி நோட் 9 சாதனம்
வெளிவரும்.

விலை:
சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.64,000-வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








