கண்ணை வரும் சாம்சங் கேலக்ஸி நோட் 9: விலை எவ்வளவு தெரியுமா?
சாம்சங் நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பு கேலக்ஸி நோட் 9. புதிய வரவான இந்த ஸ்மார்ட் போன் வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.
இந்திய நுகர்வோர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் தனது தயாரிப்புகளில் புதுமை புகுத்தி வருகிறது. தனது ஸ்மார்ட் போன் தயாரிப்பில் பல்வேறு வசதிகளையும் கொண்டு வந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

புதிய தொழில் நுட்ப ஸ்மார்ட் போன்களையும் தயாரித்து மக்களை தன் வசப்படுத்தி விற்பனையிலும் சாம்சங் போன் நிறுவனம் சாதனை படைத்து வருகிறது.

கேலக்ஸி நோட் 9:
சாம்சங் நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பு கேலக்ஸி நோட் 9. புதிய வரவான இந்த ஸ்மார்ட் போன் வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.

6.3 இன்ச் திரை:
கேலக்ஸி நோட் 9 இந்த மாடல் ஸ்மார்ட் போனின் திரை 6.3 இஞ்ச். அமோல்டு டிஎஸ்பிலேயும் அதன் சராசரி விகிதம் 18:5:9 இருக்கும். பிக்சல் 2690 x 1080 அளவில் பிக்சல் இருக்கும். இந்த போனை எக்ஸினோஸ் 9810 எஸ்ஓஎசி இயக்குகிறது.

6 ஜிபி ரேம்:
இந்த கேலக்ஸி நோட் 9ல் 6 ஜிபி ரேம் உடையே போனை வாங்கும் போது, 64ஜிபி மற்றும் 124 ஜிபி ரோம் உடையை போனை தேர்வு செய்து வாங்க முடியும்.

கேமரா மெகா பிக்சல்:
கேலக்ஸி நோட் 9 போன் முன் பக்க கேமரா 8 மெகா பிக்சலும், பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ள இரட்டை கேமராவுக்கு 12 மெகா பிக்சலும் இருக்கிறது.

4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:
இந்த வகை ஸ்மார்ட் போனுக்கு 4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. புளூடூத்தில் சாதனமும், செல்பி டைமைர், மியூசிக் மற்றும் தற்போது வந்துள்ள பிளாஸ்சிங் தொழில் நுட்பமும் இதில் இருக்கிறது. இந்த போனின் விலை சுமார் ரூ.79 ஆயிரம் இருக்கும்.


Click it and Unblock the Notifications