Home
Mobile

மிரட்டலான கேலக்ஸி நோட் 9 அறிமுகம்: ஐபோன் கூட இவ்வளவு விலை இல்லை.!

சாம்சங் நிறுவனம் தனது புத்தம் புதிய அட்டகாசமான பிளாக்ஷிப் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஐ, நேற்று நியூயார்க் இல் நடைபெற்ற அன்பாக்டு விழாவில் மக்களுக்கு அறிமுகம் செய்தது.

By Sharath

சாம்சங் நிறுவனம் தனது புத்தம் புதிய அட்டகாசமான பிளாக்ஷிப் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஐ, நேற்று நியூயார்க் இல் நடைபெற்ற அன்பாக்டு விழாவில் மக்களுக்கு அறிமுகம் செய்தது. இந்த புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 24, 2018 சந்தைக்கு விற்பனைக்கு வருகிறதென்று சாம்சங் நிறுவனம் உறுதியாகக் கூறியுள்ளது.

மிரட்டலான கேலக்ஸி நோட் 9 அறிமுகம்: ஐபோன் கூட இவ்வளவு விலை இல்லை.!

சாம்சங் கேலக்ஸி நோட் 9 எஸ் பென்னுடன் மிட்னையிட் பிளாக், லாவெண்டர் பர்ப்பில், மெட்டாலிக் காப்பர் மற்றும் ஓசன் ப்ளூ நிறத்தில் வருகிறது. முக்கியமாக ஓசன் ப்ளூ கேலக்ஸி நோட் 9 மஞ்சள் நிற எஸ் பென்னுடன் வரும் ஸ்மார்ட்போன் க்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பிருக்கிறது.

மிரட்டலான கேலக்ஸி நோட் 9 அறிமுகம்: ஐபோன் கூட இவ்வளவு விலை இல்லை.!

புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இல், பல சிறப்பம்சங்கள் நிறைந்திருக்கிறது. அதில் முக்கிய சிறப்பம்சமாக சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இன் எஸ் பென் சேவை ப்ளூடூத் கணேட்டிவிட்டி அம்சத்துடன் வருதே தனி சிறப்பு. இந்த புதிய எஸ் பென் சேவையை கொண்டு பயனர்கள் செல்ஃபி கிளிக் செய்யலாம், யூடூப் வீடியோகளை பாஸ் செய்யும் வசதி எனப் பல தரச் சேவைகளுடன் எஸ் பென் அசத்துகிறது.

"போர்ட்நைட்" பேட்டில் கேம்

இத்துடன் சாம்சங் நிறுவனம் பிரத்தியேக அறிவிப்பு ஒன்றையும் அறிவித்திருக்கிறது. ராயல் பிரீமியம் "போர்ட்நைட்" பேட்டில் கேம் இன் முதல் பீட்டா பயன்பாடு கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

பெரிய திரை:

பெரிய திரை:

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இல் 6.4 இன்ச் 18:5:9 விகித குவாட் ஹெச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளேயுடன் கூடிய 2690 x 1080 பிக்சல் மற்றும் 516ppi பிக்சல் அடர்த்தி கொண்ட தொடுதிரை வசதியுடன் வருகிறது.

பிராசஸர் விவரம் :

பிராசஸர் விவரம் :

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அட்ரினோ 630 ஜிபியு மற்றும் ஆக்டா கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர் மாலி G72MP18 ஜிபியு வுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

ஸ்டோரேஜ் விவரம்:

ஸ்டோரேஜ் விவரம்:

6 ஜிபி ரேம் 128 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் 512 ஜிபி உள் சேமிப்பு என இரண்டு வேரியண்ட் மாடல்களில் கிடைக்கிறது. இத்துடன் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1டிபி வரை சேமிப்பை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.

கேமரா விவரம்:

கேமரா விவரம்:

12 எம்பி பிரைமரி கேமரா f/2.4-f/1.5 அப்பேர்ட்ச்சர் உடன் 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா f/2.4 அப்பேர்ட்ச்சர் கொண்ட டூயல் கேமராயுடன் 8 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா f/1.7 அப்பேர்ட்ச்சர் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷுடன் வருகிறது. 960fps சூப்பர் ஸ்லோ-மோஷான் ரெகார்டிங் மற்றும் புள் எச்டி ரெகார்டிங் இதில் உள்ளது.
வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68) தரச்சான்று பெற்றது.

பேட்டரி விவரம்:

பேட்டரி விவரம்:

4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் சேவை, வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 9 வருகிறது.

இதர சேவைகள்:

இதர சேவைகள்:

ஸ்டீரியோ ஸ்பீக்கர் டால்பி அட்மோஸ் ஆடியோ சேவையுடன், சிங்கிள் மற்றும் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் 4ஜி வோல்ட்இ சேவையுடன் வருகிறது. இத்துடன் வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி 3.1 இதர சேவைகளும் இதில் உள்ளது.

விலை விவரம்:

விலை விவரம்:

6 ஜிபி ரேம் 128 ஜிபி உள் சேமிப்பு வேரியண்ட் சாம்சங் கேலக்ஸி நோட் 9 இன் விலை ரூ.68,750.
8 ஜிபி ரேம் 512 ஜிபி உள் சேமிப்பு வேரியண்ட் சாம்சங் கேலக்ஸி நோட் 9 இன் விலை ரூ.85,940 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கேலக்ஸி நோட் 9 இன் விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி துவங்குகிறது. தற்பொழுது முன்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில், இந்தியாவிற்கு வெகு விரைவில் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 9 Key specifications top features India price everything you need to know : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X