Subscribe to Gizbot

6.38-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!

Written By:

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் பொறுத்தவரை எஸ்எம்-என்960யூ  என்று தெரிவிக்கப்பட்டது.

6.38-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, மேலும் கைரேகை ஸ்கேனர் மற்றும் செயற்கை
நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த கேலக்ஸி நோட் 9 சாதனம் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.35-இன்ச் முழு எச்டி டிஸபிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 18:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இக்கருவி வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.38-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!

குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டு சாம்சங் கேலக்ஸி நோட் 9 வெளிவரும், மேலும் ஆண்ட்ராய்டு
8.0.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.38-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யூஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள்
இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to check PF Balance in online (TAMIL)

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் 3850எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்
பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

English summary
Samsung Galaxy Note 9 has an official support page now ; Read more about this in Tamil GizBot

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot