ஐபோன் எக்ஸ்க்கு போட்டியாக வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!

    மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி ஐபோன் எக்ஸ் சாதனத்தில் இடம்பெற்றுள்ள notch வசதியை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 9  ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐபோன் எக்ஸ்க்கு போட்டியாக வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!

    குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் அம்சம் மற்றும் வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

    ஐபோன் எக்ஸ் சாதனத்தில் உள்ள ஃபேஸ் அன்லாக் வசதியைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி நோட் 9 சாதனம், மேலும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் சாதனத்தை விட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

    கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

    ஐபோன் எக்ஸ்க்கு போட்டியாக வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!

    கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
    இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

    இந்த கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
    இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் அழைப்புகள் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி வெளிவரும்.

    இந்த ஸ்மார்ட்போனில் எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும் என அந்நிறுவனம் சார்பில் தகவல்
    தெரிவிக்கப்பட்டள்ளது. குறிப்பாக மிட்நைட் பிளாக், டைட்டானியம் சாம்பல், கோரல் ப்ளூ போன்ற நிறங்களில் கேலக்ஸி நோட் 9 வெளிவரும்.

    How to Find a domain easily for your business (TAMIL)

    வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
    அடக்கம் எனக் கூறப்படுகிறது.

    ஐபோன் எக்ஸ்க்கு போட்டியாக வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!

    கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Samsung Galaxy Note 9 could sport iPhone X like notch leaked patent hints; Read more about this in Tamil GizBot
    X

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more