ரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.!
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் பிரைம் தின விற்பனையில் இன்று சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த அட்டகாசமான சலுகையை பல்வேறு மக்கள பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜூலை 16-ம் தொடங்கும் இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு ஸ்மாரட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் பிரைம் தின விற்பனையின் போது சாம்சங கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.10,000 விலை குறைக்கப்பட்டு ரூ.45,900-விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.55,900-ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் குறிப்பிட்ட கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 :
சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.3-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440 x 2960 பிக்சல் திர்மானம் மற்றும் 18:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 8895 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோகேம் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கேமரா:
இந்த கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3300எம்ஏஎச்:
கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த
ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications