இன்பினிட்டி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் உடன் கேலக்ஸி நோட் 8.!

|

சாம்சங் கேலக்ஸி நோட் 8 பற்றி சமீபத்தில் எண்ணற்ற வதந்திகள் மற்றும் கசிவுகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த சாதனம் தான் சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைமை சாதனமாக இருக்கும் என்பதால் ஏகப்பட்ட செய்திகள் வெளியாவது வழக்கமான ஒன்றுதான்.

அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் கேலக்ஸி நோட் 8 பற்றி நெதர்லாந்தில் இருந்து ஒரு புதிய அறிக்கை ஆன்லைன் வெளிப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி இக்கருவி ப்ஹாப்ளெட் ஆகும் அதாவது ஒரு 6.3 அங்குல எட்ஜ் டூ எட்ஜ் இன்பினிட்டி டிஸ்பிளே கொண்டிருக்கும் என்கிறது.

இன்பினிட்டி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் உடன் கேலக்ஸி நோட் 8.!

அதாவது இந்த ஸ்மார்ட்போன் அப்படியே சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் போன்றே டிஸ்பிளே கொண்டிருக்கும். இந்த தகவல் உண்மை என்று மாறிவிட்டால், சாதனம் நிறுவனத்தின் சமீபத்திய பிளாக்ஷிப் மாடல்களில் காணப்படும் அதே 18.5:9 திரை விகிதம் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்த விகிதம் வீடியோக்களை பார்ப்பது அல்லது கேம் விளையாடும் அனுபவத்தை அதிகரிக்கும். எனினும், காட்சித் தெளிவு பற்றி இன்னும் அறியப்படவில்லை. நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் பயன்படுத்தப்படும் அதே 1440 × 2960 தீர்மானம் இதிலும் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. மேலும் திரை தீர்மானம் 4கே ஆதரவு கொண்டிருக்கும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

மற்றொரு அம்சமாக இக்கருவி டிஸ்பிளேவின் கீழ் கைரேகை ஸ்கேனர் உட்பொதித்து வரலாம் என்று எதிர்பார்க்க்கப்டுகிறது. வெளியான அறிக்கைகளின் படி, கொரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான சாம்சங் அதன் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் கருவிகளில் இதை முயற்சி செய்து தோல்வி கண்டது, எனவே இரண்டு சாதனங்களிலும் பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை ஸ்கேனர் கொண்டு வந்தது. ஆக இம்முறை கேலக்ஸி நோட் கருவியின் முன் திரையில் கீழ் பயோமெட்ரிக் ரீடர் இடம்பெறலாம்.

இக்கருவியின் மென்பொருள் பொறுத்தவரை, வெளியான அறிக்கையின்கீழ் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் (பெட்டிக்கு வெளியே ) கொண்டு இயங்கும் என்றும், இக்கருவியின் அறிமுகத்திற்கு பின்னர் சாம்சங் கருவிகள் போட்டிகளில் பின்தங்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 8 tipped to feature Infinity display and Android 7.1.1 Nougat. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X