அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி நோட் 8.!

இக்கருவி 6.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2960-1440) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

By Prakash
|

சாம்சங் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் கேலக்ஸி நோட் 8 அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மேப்பிள் கோல்ட், மிட்நைட் பிளாக் மற்றும் மேப்பிள் தங்கம் போன்ற நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.அதன்பின்பு பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் அமேசான் வலைதளத்தில் மிக எளிமையாக கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.67,900-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.3,000-வரை விலை குறைக்கப்பட்டு 64,900-என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 6.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2960-1440) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த
ஸ்மார்ட்போன். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

டூயல் ரியர் கேமரா ;

டூயல் ரியர் கேமரா ;

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. அதன்பின் டெலிஃபோட்டோ லென்ஸ் OIS, f / 2.4 துளை, 10x டிஜிட்டல் ஜூம் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 2ஒ ஆப்டிகல் ஜூம் மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

கைரேகை சென்சார், வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக்
போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3330எம்ஏஎச்:

3330எம்ஏஎச்:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 3330எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 8 price slashed by Rs 3000 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X