சாம்சங் கேலக்ஸி நோட் 8 இந்தியாவில் ரூ.12,000 நிரந்தர விலைக் குறைப்பு பெறுகிறது.!
சாம்சங் நிறுவனத்தின் சென்ற வருடம் விற்பனைக்கு வந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி நோட் 8 இன் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் சென்ற வருடம் விற்பனைக்கு வந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி நோட் 8 இன் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 8 தற்பொழுது இந்திய சந்தையில் ரூ.12,000 நிரந்தர விலைக் குறைப்புடன் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் அமேசான் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இப்பொழுது இருந்தே ரூ.12,000 விலை குறைப்புடன் அமேசான் மற்றும் சாம்சங் வளைத்தலில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 கிடைக்கிறது.
இந்திய சந்தைக்கு சாம்சங் கேலக்ஸி நோட் 8 விற்பனைக்கு வந்த பொழுது அதன் விலை ரூ.67,900 ஆக இருந்தது. தற்பொழுது ரூ.12,000 விலை குறைக்கப்பட்டு ரூ.55,900 க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

இத்துடன் இன்னும் சில சலுகைகளை அமேசான் மற்றும் சாம்சங் அறிவித்திருக்கிறது. எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.4000 கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது. இத்துடன் நீங்கள் வாங்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 உடன் ரூ.4000 க்கான எக்ஸ்சேஞ் ஆஃபர் சலுகையும் வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டி இல்லா மாத தவனையும் வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி நோட் 8 மிட்நைட் ப்ளாக், மாப்பில் கோல்ட் மற்றும் ஆர்ச்சிட் க்ரெய் வனத்தில் விற்பனைக்குக்கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications