6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி நோட் 8.!
சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொருத்தவரை டூயல் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.!
தற்போது இணையத்தில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 என்ற ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் கசிந்துள்ளது, மேலும் அதன் வடிவமைப்பில் பல மாற்றங்கள் கொண்டுவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா இடம்பெற்றுள்ளதாக ஆன்லைனில் தகவல்கள் கசிந்துள்ளது, மேலும் வரும் செப்டம்பர் மாதம் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டூயல் கேமரா:
சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொருத்தவரை டூயல் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 மெகாபிக்சல் சென்சார்கள் இதனுடன் சேரந்துவரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஓஐஎஸ் ஆப்டிகல் லென்ஸ் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 835:
பொதுவாக ஸ்னாப்டிராகன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும், இவற்றில் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6.3-இன்ச் டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, இதன் வடிவமைப்புக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு சிறந்த ஆடியோ தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3300எம்ஏச்:
இந்த ஸ்மார்ட் போன் உடன் சிறந்த 3.5எம்எம் ஹெட் போன் ஜேக் வரும். மேலும் பல இணைப்பு ஆதரவுகள் இவற்றில்இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications