2017 செப்டம்பர் 12 : அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி நோட் 8 அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

By Prakash
|

இந்தியாவில் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 8 அறிமுகம் செய்யப்படுகிறது, மேலும் அறிமுகம் செய்தபின்பு ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டெல்லியில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மொபைல் சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் பொறுத்தமட்டில் டூயல் கேமரா மற்றும் டூயல் சிம் ஆதரவு கொண்டுள்ளது, டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அதிகம் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொதுவாக 6.3-இன்ச் க்யுஎச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 18.5: 9 விகிதம் இடம்பெற்றுள்ளது இதன் டிஸ்பிளே வடிவமைப்பு.

ஸ்னாப்டிராகன் 835:

ஸ்னாப்டிராகன் 835:

இக்கருவி ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டுள்ளது, மேலும்இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

டூயல் ரியர் கேமரா ;

டூயல் ரியர் கேமரா ;

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. அதன்பின் டெலிஃபோட்டோ லென்ஸ் OIS, f / 2.4 துளை, 10x டிஜிட்டல் ஜூம் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 2ஒ ஆப்டிகல் ஜூம் மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

கைரேகை சென்சார், வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3330எம்ஏஎச்:

3330எம்ஏஎச்:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொறுத்தவரை 3330எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்
இவற்றின் விலைப் பொறுத்தவரை ரூ.74,900 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Galaxy Note 8 to be launched in India on September 12; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X