2017 ஆகஸ்ட் 23 : எட்டு நிறங்களில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 8.!

By Prakash
|

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொறுத்தவரை எட்டு நிறங்களில் வெளிவரும் என தகவல் கிடைத்துள்ளது.

சீனாவின் வெய்போ என்ற இணையதளத்தில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 பற்றிய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது, அதன் அடிப்படையில் கேலக்ஸி நோட் 8 மிட்நைட் பிளாக், ஆர்க்டிக் சில்வர், ஆர்ச்சிட் கிரே, வைலட், கோரல் புளூ, டார்க் புளூ, டீப் சீ புளூ, பின்க் மற்றும் கோல்டு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெய்போ:

வெய்போ:

வெய்போ இணையதளத்தில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொறுத்தவரை எட்டு நிறங்கள் கொண்ட போன்கள் வெளியிடப்பட்டுள்ளது,அதன்பின்பு சாம்சங் ஸ்மார்ட்போனின் வால்பேப்பர்களும் அதனுடன் வெளியிடப்பட்டுள்ளது.

6.3-இன்ச் டிஸ்பிளே:

6.3-இன்ச் டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் முழு க்யுஎச்டி இன்பினிட்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1440-2960) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

ஸ்னாப்டிராகன் 835:

ஸ்னாப்டிராகன் 835:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 எக்சைனோஸ் 8895 சிப்செட் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலியை கொண்டுள்ளதுஎனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

12எம்பி டூயல் கேமரா:

12எம்பி டூயல் கேமரா:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொறுத்தவரை 12எம்பி டூயல் கேமரா இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் வைடு ஆங்கிள் லென்ஸ் பொறுத்தப்பட்டுள்ளது.

 6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

இக்கருவியில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்புவசதி செய்து தரப்பட்டுள்ளது.

3300எம்ஏஎச்:

3300எம்ஏஎச்:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொறுத்தவரை 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில்இடம்பெற்றுள்ளது.

விலை:

விலை:

இக்கருவியின் விலை ரூ.75,400 வரை நிர்ணயம் செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Galaxy Note 8 to be launched in eight color variants ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X