பெரிய அம்சங்கள் கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7!!

By Meganathan
|

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 கருவி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் இந்தக் கருவி ஆகஸ்டு 11 ஆம் தேதி வெளியிடப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டிருக்கும் கேலக்ஸி நோட் 7 உலகெங்கும் ஸ்மார்ட்போன் ஆர்வலர்களைக் கவர்ந்திழுத்திருக்கின்றது.

பெரிய அம்சங்கள் கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7!!

பல்வேறு புதிய அம்சங்கள் கொண்ட பெரிய கருவியாக கேலக்ஸி நோட் 7 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி நோட் 7 கருவியின் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் ஸ்லைடர்களில்..

ஐரிஸ் ஸ்கேனர்

ஐரிஸ் ஸ்கேனர்

இந்தக் கருவியில் ஐரிஸ் ஸ்கேனர் மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இதன் ஐரிஸ் ஸ்கேனர் மூலம் கருவியிணனை கண்களை மூலம் பாதுகாக்கும். இந்த அம்சம் மூலம் சாம்சங் பே மற்றும் ஆப்களை வாங்கவும் பயன்படுத்த முடியும்.

டூயல் எட்ஜ் கர்வ்டு டிஸ்ப்ளே

டூயல் எட்ஜ் கர்வ்டு டிஸ்ப்ளே

கேலக்ஸி நோட் 7 கருவியில் 5.7 இன்ச் QHD Super AMOLED டிஸ்ப்ளே மற்றும் 2560*1440 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இதோடு கேலக்ஸி எஸ்6 எட்ஜ் கருவியை போன்று இந்தக் கருவியிலும் டூயல்-எட்ஜ் கர்வ்டு டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது.

சிப்செட்

சிப்செட்

வன்பொருளைப் பொருத்த வரை இந்தக் கருவி இரு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்டா-கோர் 64-பிட் எக்சைனோஸ் 8890 அல்லது குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் . இதோடு 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

கேலக்ஸி நோட் 7 கருவியில் 64 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 256 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மெமரியை வைத்து கவலை கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை 12 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் முன்னணி கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மென்பொருள்

மென்பொருள்

ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் மேம்படுத்தப்பட்ட TouchWiz யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கருவியில் ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் கிடைக்கும் என்பதும் உறுதியாகிவிட்டது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

மற்ற கருவிகளில் வழங்கப்படும் சாதாரண கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் புதிய வகை யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேகமான சார்ஜிங் மற்றும் தரவுகளை வேகமாகப் பரிமாறி கொள்ள முடியும்.

பேட்டரி

பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியானது 3500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதோடு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

எஸ் பென்

எஸ் பென்

கேலக்ஸி நோட் 7 கருவியில் வழங்கப்பட்டுள்ள புதிய வகை ஸ்டைலஸ் கொண்டு தண்ணீரிலும் பயன்படுத்த முடியும். வாட்டர் ப்ரூஃப் அம்சத்தை உறுதி செய்யும் ஐபி 68 சான்று பெற்றிருப்பதால் கருவியை ஐந்தடி நீரிலும் சுமார் 30 நிமிடங்களுக்குப் பயன்படுத்த முடியும்.

விற்பனை

விற்பனை

சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியின் விற்பனை ஆகஸ்டு 19 ஆம் தேதி முதல் துவங்குகின்றது. இந்தக் கருவி ப்ளூ கோரல், கோல்டு பிளாட்டினம், சில்வர் டைட்டானியம் மற்றும் பிளாக் ஆனிக்ஸ் போன்ற நிறங்களில் கிடைக்கின்றது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 7 with Awesome specs Launched Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X