Home
Mobile

கேலக்ஸி நோட் 3யின் 5 அட்டகாசமான அம்சங்கள்!!

By Prabakaran

சாம்சங் நிறுவனம் நேற்று (செப்டம்பர் 17 ஆம் தேதி) டெல்லியில் தனது புதிய படைப்புகளான கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்சை வெளியிட்டது. இந்த இரண்டு சாதனங்களும் பல புதுமையான அம்சங்களை கொண்டுள்ளன.

கேலக்ஸி நோட் 3 யின் விலை ரூ. 49,990 ஆகும். கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ.29,990 ஆகும். இவைகள் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் ரீடெய்ல் ஸ்டோர்களில் விற்பனைக்கு வர உள்ளன. சாம்சங் கேலக்ஸி நோட் 3யில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

5.7இன்ஞ் 1080p சூப்பர் அமோலெட் பேனல் கொண்ட கேலக்ஸி நோட்3, 1.9GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிரசாஸர் உடன் வந்துள்ளது.13 மெகாபிக்சல் கேமரா, 2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா உள்ளன. ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கேலக்ஸி நோட்3யில் 3ஜிபி ராம் உள்ளது.

கேலக்ஸி நோட்3யில் 4k வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மெமரியுடன் கிடைக்கிறது மேலும் மைக்கிரோ எஸ்டி கார்ட் மூலம் நீங்கள் 64ஜிபி வரை மெமரியை எக்ஸ்பேண்ட் செய்து கொள்ளலாம். கேலக்ஸி நோட்3 லெதர் பினிஷிங்குடன் அழகிய வடிவில் வந்துள்ளது.

IR LED, WiFi 802.11a/b/g/n/ac, MHL 2.0, புளுடூத் 4.0, 3,200mAh பேட்டரி, LTE Cat4 support apart DC-HSPA+ 42Mbps GSM / EDGE ஆகிய சிறப்புகள் இதில் உள்ளன. கேலக்ஸி நோட்3யில் உள்ள அட்டகாசமான அம்சங்கள் பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 3 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3யில் பவர்புல் 1.9GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிரசாஸர், லேடெஸ்ட் ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் மற்றும் 3ஜிபி ராம் உள்ளது இவைகள் அனைத்தும் இதை ஒரு பவர்புல் சாதனமாக மாற்றுகின்றன. இந்த அம்சங்களால் கண்டிப்பாக கேலக்ஸி நோட் 3யின் இயக்கம் மிக சிறப்பாக இருக்கும்.

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

S pen என்று அழைக்கப்படும் இதில் உள்ள ஸ்டைலஸ் போனுக்கும் நமக்குமான தொடர்பை மிகவும் எளிதாக்குகிறது. இதை வைத்து ஏர் கமேன்ட் பேலட் மூலம் நீங்கள் பல அம்சங்களை இயக்கலாம்

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

போன் தொலைந்து விட்டால் நீங்கள் அதை டிராக் செய்ய அல்லது அதில் உள்ள டேட்டாவை அழிக்க வகையில் இதில் புதிய டெக்னாலஜி உள்ளது.

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 3க்கு கவர்களை அழகிய டிஸைனில் 10 வகையான வண்ணங்களில் வெளியிட்டுள்ளது

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட் 3யில் சாம்சங் KNOX என்ற வசதி உள்ளது இதன் மூலம் நீங்கள் முக்கியமான் அப்ளிகேஷன் மற்றும் டேட்டாவை பாதுகாப்பாக வைக்கலாம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X