Home
Mobile

சாம்சங்கின் அதிரடி கலக்கல் இந்தியாவிலும் தொடங்குகிறது!!

கடந்த வாரம் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடந்த IFA 2013 வர்த்தக கண்காட்சியில் பல முன்னனி நிறுவனங்கள் தங்கள் புதிய சாதனங்களை வெளியிட்டனர். இதில் சாம்சங் நிறுவனத்தின் சாதனங்களுக்கு மக்களிடையே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன.

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் சாம்சங் நிறவனம் பெரிய திரை கொண்ட அல்ட்ரா ஹச்டி டிவி, டேப்லெட், ஸ்மார்ட்போன் போன்ற பல சாதனங்களை வெளியிட்டது. இதில் மிகவும் முக்கியமானது சாம்சங்கின் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் ஆகும்.

சாம்சங்கின் வெற்றி படைப்பான கேலக்ஸி நோட் 2 வின் அடுத்த பரிமாணமாகவே நோட் 3 வருகிறது. ஜெர்மனியில் நடந்த வர்த்தக விழாவில் கலக்கிய கேலக்ஸி நோட்3 மற்றும் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் இப்பொழுது இந்தியாவிலும் கலக்க வருகிறது.

ஆம், வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி இந்திய தலைநகரமான டெல்லியில் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. சாம்சங்கின் ஸ்மார்ட்போன்களை விரும்பும் இந்திய மக்களுக்கு இது இனிப்பு செய்தியாகவே இருக்கும்.

கீழே உள்ள சிலைட்சோவில் சாம்சங் கேலக்ஸி நோட் 3, சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்சின் படங்கள் மற்றும் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

5.7இன்ஞ் 1080p சூப்பர் அமோலெட் பேனல் கொண்ட கேலக்ஸி நோட்3, 2.3GHZ ஸ்னாப்டிராகன் 800 சிப்ஷெட் மற்றும் 1.9GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிரசாஸர் என இது இரண்டு வெர்ஷன்களில் வந்துள்ளது.

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

13 மெகாபிக்சல் கேமரா, 2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா உள்ளன. ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கேலக்ஸி நோட்3யில் 3ஜிபி ராம் உள்ளது.

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3யில் 4k வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32ஜிபி மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மெமரியுடன் கிடைக்கிறது.

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

IR LED, WiFi 802.11a/b/g/n/ac, MHL 2.0, புளுடூத் 4.0, 3,200mAh பேட்டரி, LTE Cat4 support apart DC-HSPA+ 42Mbps GSM / EDGE ஆகிய சிறப்புகள் இதில் உள்ளன.

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3

கேலக்ஸி நோட்3 லெதர் பினிஷிங்குடன் அழகிய வடிவில் வந்துள்ளது. இதன் கவர்கள் கண்களை கவரும் வகையில் 10 வண்ணங்களில் உள்ளன.

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்சில் 320*320 பிக்சல்ஸ் ரெசலூஸன் கொண்ட 1.63 இன்ஞ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே உள்ளது.

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

800MHZ பிராசஸர், 512எம்பி ராம், 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளன.

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் 1.9மெகாபிக்சல் கேமரா மற்றும் 315mAh பேட்டரி கொண்டுள்ளது.

 கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள ரப்பர் வாரை பல வண்ணங்களில் மாற்றிக்கொள்ளலாம்.

 கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்

கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்


இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள சிறப்பான விஷியம், சாம்சங் நிறுவனம் 70க்கும் அதிகமான அப்பிளிகேஷன் தயாரிப்பவர்களுடன் இணைந்து நிறைய அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும் வகையில் ஸ்மார்ட்வாட்ச்சை உருவாக்கியுள்ளது.

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X