தரமான சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அருமையான சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, தற்சமயம் இந்நிறுவனம் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா சாதனங்களுடன் மற்றும் பல சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் அனைத்தும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த லக்ஸி நோட் 20 அல்ட்ரா சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.9-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2400 பிக்சல் திர்மானம் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7 பாதுகாப்பு வசதியைக் கொண்டும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக எஸ்பெண் ஆதரவுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிப்செட் வசதி
சர்வதேச சந்தையில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 990எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். ஆனால் சீனா மற்றம் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வசதியுடன் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த மென்பொருள் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி பெரிஸ்கோப் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 10எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம், எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 4300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 45வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

புளூடூத் 5, 5ஜி ஏஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, ஜிபிஎஸ் குளோநஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்,உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.97,500-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் முதலில் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications