Home
Mobile

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனுக்கு ரூ.22,000-வரை விலைகுறைப்பு.!

அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனுக்கு ரூ.22,000-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனை ரூ.54,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனுக்கு ரூ.22,000-வரை விலைகுறைப்பு.!

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக தனித்துவமான
அம்சங்களை கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் தரமான எக்ஸிநோஸ் 990 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு
சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேற ஆதரவுகள் இவற்றுள அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 4G, இரட்டை சிம் + இசிம், புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி, வைஃபை உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

அதேபோல் இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட விலைகுறைப்பு சலுகை இன்று மட்டுமே இருக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனம் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 20 Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X