சாம்சங் கேலக்ஸி நோட்-2 மற்றும் கேலக்ஸி நோட்: ஓர் ஒப்பீட்டு அலசல்

By Super
|
சாம்சங் கேலக்ஸி நோட்-2 மற்றும் கேலக்ஸி நோட்: ஓர் ஒப்பீட்டு அலசல்

பல மாதங்களாக வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டை அறிமுகம் செய்கிறது சாம்சங் நிறுவனம் என்ற செய்தி சமீபத்தில் எல்லா இடங்களிடமும் எதிரொலித்து கொண்டே இருக்கிறது.

இதனால் கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டில் என்னென்ன புதிய வசதிகள் இருக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். அதோடு கேலக்ஸி நோட் மற்றும் கேலக்ஸி நோட்-2 ஆகிய இந்த இரண்டு எலக்ட்ரானிக் சாதனங்களை பற்றிய ஒப்பீட்டினை பார்க்கலாம்.

கேலக்ஸி நோட் ஃபேப்லட்டை விட, கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டின் எடை 2 கிராம் கூடுதலாக உள்ளது. எடை மட்டும் அல்லாமல் கேலக்ஸி நோட்-2 வெர்ஷனின் திரையும், சாம்சங் நிறுவனத்தின் முந்தைய வெர்ஷனான கேலக்ஸி நோட் ஃபேப்லட்டை விட சற்று பெரிய திரையினை கொண்டிருக்கிறது.

கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் 5.5 இஞ்ச் திரையினையும், கேலக்ஸி நோட் 5.3 இஞ்ச் திரையினையும் கொண்டதாக இருக்கும். 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை கேலக்ஸி நோட் ஃபேப்லட்டும், 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டும் வழங்கும்.

எஸ்-பென் என்ற புதிய வசதி, கேலக்ஸி நோட் பற்றி வாடிக்கையாளர்களை அதிகம பேச வைத்தது. ஆனால் கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டில் இதே எஸ்-பென் வசதி இன்னும் சிறப்பான வசதிகளை வழங்குவதாக உருவாக்கப்ப்டடுள்ளது.

கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டில் உள்ள எஸ்-பென் வசதியை இ-மெயிலிலும் பயன்படுத்த முடியும். இயங்குதளத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகளை வழங்குகிறது கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்.

கேலக்ஸி நோட் ஃபேப்லட்டில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டில் எளிதாக பயன்படுத்தலாம். சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபேப்லட் பற்றிய விலை விவரத்தினை கூடிய விரைவில் பார்க்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X