கேலக்ஸி நோட்-2 மற்றும் லுமியா-920 ஒப்பீடு!

இந்த இரண்டு போன்களின் இயங்குதளமுமே வெவ்வேறு ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாக இருக்கும். நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போன் விண்டோஸ்-8 இயங்குதளத்தில் இயங்கும்.
கேலக்ஸி நோட்-2 எக்ஸினோஸ் 4412 குவாட் சிப்செட் கெண்டதாக இருக்கும். லுமியா-920 ஸ்மார்ட்போன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 பிராசஸர் வசதியினை வழங்கும்.
நோட்-2 ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் மெயின் கேமராவினையும், லுமியா-920 ஸ்மார்ட்போன் 8.7 மெகா பிக்ஸல் கேமராவினையும் வழங்கும். லுமியா-920 ஸ்மார்ட்போனில் 1.2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் மற்றும் கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனில் 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் அழகாக பயன்படுத்த முடியும். அதிலும் லுமியா-920 ஸ்மார்ட்போனில் இருக்கும் கேமராவில் ப்யூர்வியூ டெக்னாலஜியை கொடுக்கும்.
மெமரி வசதியில் கேலக்ஸி நோட்-2, லுமியா-920 ஸ்மார்ட்போனை மிஞ்சுகிறது. கேலக்ஸி நோட்-2வில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி வரை மெமரி வசதியினை பயன்படுத்த முடியும். நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போனில் 32 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதி கொடுக்கப்படும்.
நோட்-2வில் போன் 3,100 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியும், லுமியா-920 ஸ்மார்ட்போன் 2,000 எம்ஏஎச் பேட்டரியின் ஆற்றலையும் கொண்டதாக இருக்கும்.இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 3ஜி, வைபை, 4ஜி எல்டிஇ போன்ற வசதிகளை சிறப்பாக பெறலாம். இந்த செய்தியினை ஆங்கிலத்தில் மற்றும் கன்னடாவில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications