கேலக்ஸி நோட்-2 மற்றம் ஆசஸ் பேட்போன்-2: ஓர் ஒப்பீட்டு அலசல்

|

கேலக்ஸி நோட்-2 மற்றம் ஆசஸ் பேட்போன்-2: ஓர் ஒப்பீட்டு அலசல்

வாடிக்கையாளர்களில் பலரை காத்திருக்க வைத்த சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட்-2, பேட்ஃபோன் ஸ்டேஷனுடன் புதிய படைப்பினை கொடுத்த ஆசஸ் நிறுவனத்தின் பேட்ஃபோன்-2 ஆகிய இந்த இரண்டு போன்களின் தொழில் நுட்ப திறன் பற்றிய குறிப்புகளை இங்கே ஒப்பிட்டு பார்க்கலாம்.

4.7 இஞ்ச் திரை கொண்ட பேட்ஃபோன்-2, சூப்பர் ஐபிஎஸ் தொடுதிரையில் கலக்குவதோடு 1280 X 720 பிக்ஸல் திரை துல்லினை எளிதாக வழங்கும். கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் 5.5 சூப்பர் அமோலெட் தொடுதிரை வசதி கொண்டதாக இருக்கும். அதிக திரையினை கொண்டதாக இருப்பினும் இதன் எடை 180 கிராம் என்பதால் எளிதாக கையாள முடியும்.

ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை பேட்போன்-2 போனில் பெறலாம். மேலும் இதில் குவாட் கோர் குவால்காம் ஏபிகியூ8064 பிராசஸரினை பெற முடியும். கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டில் ஆன்ட்ராய்டின் லேட்டஸ்ட் 4.1 ஜெல்லி பீன் இயங்குதளத்தின் செயல்பாடுகளை பயன்படுத்தலாம்.

பேட்ஃபோன்-2வில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷன் வழங்குவது போன்ற எந்த தகவல்களும் இதுவரை வழங்கப்படவில்லை. கேலக்ஸி நோட்-2 ஃபோப்லட்டில் எக்ஸினோஸ் 4412 குவாட் சிப்செட் வசதியினை பெறலாம்.

13 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் வீடியோ காலிங் வசதியினை போட்போன்-2 வழங்கும். கேலக்ஸி நோட்-2 மற்றும் பேட்ஃபோன்-2 ஸ்மார்ட்போனில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி வெர்ஷன்களை எளிதில் பெறலாம். மேலும் இந்த இரண்டு எலக்ட்ரானிக் சாதனங்களும் 2 ஜிபி வரை ரேம்

வசதிக்கும் மற்றும் 32 ஜிபி வரை எக்ஸ்பேண்டபில் மெமரி வசதியும் கிடைக்கும்.

இன்டர்நெட் வசதி பற்றிய தகவல்கள் மிக முக்கியம். பேட்ஃபோன்-2 மற்றும் கேலக்ஸி நோட்-2 போன்களில் ஹைபிரிட் தொழில் நுட்பத்திற்கேற்ப சிறப்பான பேட்டரியினையும் பயன்படுத்தலாம். கேல்கஸி நோட்-2 ஃபேப்லட்டில் 3,100 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினையும், பேட்ஃபோன்-2 ஃபேப்லட்டில் 2,140 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியையும் பெறலாம். இதனால் உயர்ந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்த அதிகமான ஆற்றலும் கிடைக்கும்.

பேட்ஃபோன்-2 ஃபேப்லட் ரூ. 64,999 விலையினையும் மற்றும் கேல்கஸி நோட்-2 ஃபேப்லட் ரூ. 39,990 விலையினையும் கொண்டதாக இருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X