கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டின் ஸ்பெஷல்!

By Super
|
கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டின் ஸ்பெஷல்!

ஐஎஃப்ஏ கண்காட்சியில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டை அறிமுகம் செய்கிறது. ஐஎஃப்ஏ கண்காட்சிக்கும் முன்னர், எல்லா நிறுவனங்களும் தங்களது எலக்ட்ரானிக் சாதனங்களை அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டினையும் அறிமுகம் செய்கிறது.

இந்த ஃபேப்லட் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒரு எலக்ட்ரானிக் சாதனம் என்று கூறலாம். சூப்பர் அமோலெட் தொடுதிரை வசதியினை கொடுக்கும் இந்த ஃபேப்லட் 3 விதமான வெர்ஷன்கள் கொண்டதாக இருக்கும்.

அந்த 3 வெர்ஷன்களும் இதன் மெமரி வசதியின் அடிப்படையில் இருக்கும். இந்த ஃபேப்லட் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று மூன்று மெமரி வசதிகள் கொண்டதாக இருக்கும். கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனில் எஸ்-பென் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்த எஸ்-பென் மேம்படுத்தப்பட்ட வசதியை வழங்குவதாக, கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டில் வழங்கப்படும். அதோடு இந்த எஸ்-பென்னை இ-மெயிலிலும் பயன்படுத்தும் வகையில் இருப்பது இன்னும் சிறப்பு என்று கூறலாம்.

தொடுதிரை, வீடியோ, எஸ்-பென் 8 மெகா பிக்ஸல் கேமரா, 1.9 மெகா பிக்ஸல் கேமரா என்று எல்லா வகையிலும் இதன் தொழில் நுட்பங்கள் மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்கும். இத்தனை புதிய வசதிகளுடன் வரும் கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் வாடிக்கையாளர்களை ஈர்க்காமல் போகுமா? கூடிய விரைவில் இதன் விலை பற்றியும் பார்க்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X