ஆகஸ்ட் 7: கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் உருவாக்கும் கேலக்ஸி நோட் 10 மாடல் இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் சார்பில் புதய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆகஸ்டு 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு இதன் விற்பனை ஆகஸ்டு 10 ஆம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

சாம்சங் நிறுவனம் உருவாக்கும் கேலக்ஸி நோட் 10 மாடல் இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஸ்மார்டபோன்களை விட இந்த ஸ்மார்ட்போன் சற்று வித்தியசமான வடிவமைப்பில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் கேலக்ஸி நோட் 10 மாடலை உருவாக்குவது பற்றி சாம்சங் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஸ்டான்டர்டு மாடலில் 6.7-இன்ச் குவாட் ஹெச்டி பேனல் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. மேலும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடலை தற்சமயம் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்கிறது.

கேலக்ஸி அன்பேக்டு விழா நடைபெற இன்னும் அதிக நேரம் இருப்பதால், சாம்சங்கின் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
எனினும், கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் வெளியீடு தாமதமாகி இருப்பதால், நோட் 10 ஸ்மார்ட்போன் வெளியீடு முன்னதாக நடைபெறவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சாம்சங் தனது கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனினை இதே அரங்கில் அறிமுகம் செய்தது. புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றி சாம்சங் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து ஆன்லைனில் வெளியாகி வருகிறது.


Click it and Unblock the Notifications