இந்தியா: விலைக்கு தகுந்த அம்சங்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி நோட் 10, நோட் 10 பிளஸ்.!

|

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவருகிறது,அதன்படி இந்தியாவில் இந்நிறுவனம் புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 10, சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது,இந்த ஸ்மார்ட்போன்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 S-Pen பயன்பாட்டுடன் கேலக்ஸி நோட் 10

S-Pen பயன்பாட்டுடன் கேலக்ஸி நோட் 10

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 6.3' இன்ச் எச்.டி.ஆர் 10 பிளஸ் (HDR10+) டிஸ்பிளேயுடன் கூடிய S-Pen பயன்பாட்டுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.8' இன்ச் கொண்ட டைனமிக் அமோலேட் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் டிஸ்பிளே தகவல்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் டிஸ்பிளே தகவல்

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் தான் மிகப் பெரிய டிஸ்பிளே ஸ்கிரீன் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு போன்களிலும் டைனமிக் அமோலேட் டிஸ்பிளேயுடன் கூடிய எச்.டி.ஆர் 10 பிளஸ் சேவையுடன் கூடிய டைனமிக் டோன் மேப்பிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.399க்கு கலக்கும் d2h மேஜிக் ஸ்ட்ரீமிங் சாதனம்: மாதச் சந்தா ரூ.25? ரூ.399க்கு கலக்கும் d2h மேஜிக் ஸ்ட்ரீமிங் சாதனம்: மாதச் சந்தா ரூ.25?

சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்டோரேஜ்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்டோரேஜ்

இரண்டு புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் Exynos 9825 சிப்செட் பிரசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் மாடல் 4ஜி திறன் கொண்ட 8ஜிபி ரேம் மற்றும்
256ஜிபி மாடாலகாவும், 5ஜி திறன் கொண்ட 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மாடலாகவும் வெளியாகியுள்ளது.

பின்பு கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி /512ஜிபி உள்ளடக்க மெமரி அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 கேமரா தகவல்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 கேமரா தகவல்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் கேமரா சேவை வழங்கப்பட்டுள்ளது, 12 மெகா பிக்சல் கொண்ட டெலி போட்டோ லென்ஸ் கேமரா, 12 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா மற்றும் 16 மெகா பிக்சில் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனில் இந்த கேமராகளுடன் சேர்த்து VGA டெப்த் விஷன் சென்சார் என்ற ஒரு சிறிய லென்ஸையும் ஃபிளாஷ் அருகில் பொருந்தியுள்ளது சாம்சங்.

தினசரி வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் ஜியோ டேட்டா யூஸ் பண்ணலாம்! ஜியோ வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்கள்! தினசரி வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் ஜியோ டேட்டா யூஸ் பண்ணலாம்! ஜியோ வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்கள்!

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் பேட்டரி தகவல்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் பேட்டரி தகவல்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், 12W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 3500 எம்.ஏ.எச் பேட்டரியுடனும், சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் 4300 எம்.ஏ.எச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் கிடைக்கும் நிறங்கள்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் கிடைக்கும் நிறங்கள்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஆரோ க்ளோ, ஆரா வைட் மற்றும் ஆரா பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் பிங்க் நிறத்திலும்
விற்பனைக்குக் கிடைக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ப்ளூ நிறத்திலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருமையான விலை:

அருமையான விலை:

சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை பொறுத்தவரை ரூ.69,999-ஆக உள்ளது. அதேபோல் 256ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.79,999-க்கு கிடைக்கும், பின்பு 512ஜிபிமெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.89,999-விலையில் கிடைக்கும். குறிப்பாக பிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் போன்ற தளங்களில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த
ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ.6,000-வரை கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 10, Note 10+ Launch Offers: Cashback, No Cost Emi, Exchange Bonus and More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X