சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் பயனர்கள் கவனத்திற்கு: இதோ புத்தம் புதிய அப்டேட்.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. தற்சமயம் வெளிவந்த தகவலின்படி, கேலக்ஸி நோட் 10 சாதனம் அண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன் யுஐ 3.0 அப்டேட்-ஐ பெற்றுள்ளது. மேலும் January 2021 Android security patch ஆதரவு இந்த அப்டேட்-இல் கிடைத்துள்ளது.

குறிப்பிட்ட அப்டேட் பற்றிய தகவல் உங்களுக்கு வரவில்லை என்றால், நீங்கள் கைமுறையாக கூட இதை சரிபார்க்கலாம் மற்றும் அப்டேட் செய்யலாம், அதற்கு நீங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ்-ற்குள் செல்ல வேண்டும், பின்னர் சாப்ட்வெர் அப்டேட்டை சரிபார்க்கலாம். என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 1080 x 2400 பிக்சல் தீர்மானத்தோடு சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் 9810 பிராசஸர் வசதியோடு மாலி ஜி 72 எண்பி 12 ஜிபியூ ஆதரவ வசதியோடு இயக்கப்படுகிறது. அதோடுஇது ஆண்ட்ராய்டு 11 இயங்குதள ஆதரவை அடிப்படையாகக் கொண்டு இந்த சாதனம் இயக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனானது மூன்று கேமராக்களோடு இயக்கப்படுகிறது. 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் உள்ளது. அதோடு இதில் 32 எம்பி செல்பீ கேமரா வசதியும் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்டுகளில் வருகிறது. 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் வசதியோடு
ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. அதோடு இதில் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மெமரி வசதியும் உள்ளது. கூடுதலாக மைக்ரோ எஸ்டிமெமரி கார்டு நீட்டிப்பு வசதியும் இதில் இருக்கிறது.

4500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் இந்த சாதனம் வந்துள்ளது. அதோடு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இதில் உள்ளது. கூடுதலாக வைஃபை, மைக்ரோ யூஎஸ்பி, ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் தயாரிப்புக்கு நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதன் வடிவமைப்பு பார்ப்போரை கவரும் விதமாக நுண்ணிப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications