உடனே முந்துங்கள்: சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் அதிரடி விலை குறைப்பு: ரூ.5000 கேஷ்பேக் சலுகையோடு!

|

samsung galaxy note 10 lite ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டதோடு கூடுதல் சலுகைகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனுக்கு விலைக்குறைப்பை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்டுகளில் விற்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் ஆகிய இரண்டு வகையில் விற்கப்படுகிறது.

கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு

கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு

6 ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அறிமுக விலை ரூ.38,999-க்கு விற்கப்பட்டது. தற்போது இந்த விலைக்குறைப்பின் மூலம் ரூ.37,999-க்கு விற்கப்படும். அதேபோல் 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனானது ரூ.40,999-க்கு விற்கப்பட்டது, விலைக்குறைப்புக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன் ரூ.39,999-க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாளுக்கு முன்பே முடித்துவிட்டோம்:பெருமையுடன் முகேஷ் அம்பானி- எதற்கு தெரியுமா?குறித்த நாளுக்கு முன்பே முடித்துவிட்டோம்:பெருமையுடன் முகேஷ் அம்பானி- எதற்கு தெரியுமா?

ஜூன் 30 ஆம் தேதி வரை பல்வேறு சலுகைகள்

ஜூன் 30 ஆம் தேதி வரை பல்வேறு சலுகைகள்

இந்த ஸ்மார்ட்போனுக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை சிட்டிபேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு ரூ.5000 கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. அதோடு விலையில்லா இஎம்ஐ சலுகை மற்றும் 2 மாதம் யூடியூப் ப்ரீமியம் சந்தா சலுகையும் வழங்கப்படுகிறது.

6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 1080 x 2400 பிக்சல் திர்மானத்தோடு சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதள ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 இயங்குதள ஆதரவு

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் 9810 பிராசஸர் வசதியோடு மாலி ஜி 72 எண்பி 12 ஜிபியூ ஆதரவ வசதியோடு இயக்கப்படுகிறது. அதோடு இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதள ஆதரவை அடிப்படையாகக் கொண்டு இந்த சாதனம் இயக்கப்படுகிறது.

32 எம்பி செல்பீ கேமரா வசதி

32 எம்பி செல்பீ கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனானது மூன்று கேமராக்களோடு இயக்கப்படுகிறது. 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் உள்ளது. அதோடு இதில் 32 எம்பி செல்பீ கேமரா வசதியும் இடம்பெற்றுள்ளது.

6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் வசதி

6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் வசதி

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்டுகளில் வருகிறது. 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் வசதியோடு ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. அதோடு இதில் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மெமரி வசதியும் உள்ளது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி மெமரி கார்டு நீட்டிப்பு வசதியும் இதில் இருக்கிறது.

எல்லாமே அவர்களுடையது: 52 சீன செயலிகளை புறக்கணிக்க அறிவுறுத்தல்!எல்லாமே அவர்களுடையது: 52 சீன செயலிகளை புறக்கணிக்க அறிவுறுத்தல்!

4500 எம்ஏஹெச் பேட்டரி

4500 எம்ஏஹெச் பேட்டரி

4500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் இந்த சாதனம் வந்துள்ளது. அதோடு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இதில் உள்ளது. கூடுதலாக வைஃபை, மைக்ரோ யூஎஸ்பி, ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் தயாரிப்புக்கு நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதன் வடிவமைப்பு பார்ப்போரை கவரும் விதமாக நுண்ணிப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
samsung galaxy note 10 lite price reduced in india and more offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X