சாம்சங் கேலக்ஸி நோட் 10லைட் ஸ்மார்ட்போனுக்கு அறிமுக சலுகை.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் மாடல் அன்மையில் அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.38,999-விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 மாடல் ரூ.40,999-க்கு வாங்க கிடைக்கிறது.

கேலக்ஸி நோட்10 லைட்
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாமல் அமேசான் மற்றும் பிளிப்கார்; வழியே விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது,பின்பு ஆரா பிளாக், ஆரா க்ளோ மற்றும் ஆரா ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக ரூ.5000-வரை அப்கிரேட் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சலுகையின் மூலம் கேலக்ஸி நோட்10 லைட் மாடலை ரூ.33,999-க்கு வாங்கலாம். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் நீங்களொரு சாம்சங் கேலக்ஸி நோட் பயனர் என்றால், உங்களின் பழைய சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் கொடுத்து ரூ.5000-வரையிலான தள்ளுபடியை பெறமுடியும். மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ் பென் ஸ்டைலஸுடன் வருகிறது, பின்பு 1080 x 2400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

128ஜிபி உள்ளடக்க மெமரி
கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் எக்ஸிநோஸ் 9810 பிராசஸர்
கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்ஸிநோஸ் 9810 பிராசஸர் வசதி உடன் மாலி-ஜி72 எம்பி18ஜிபியு ஆதரவும்
இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்
சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4500எம்ஏஎச் பேட்டரி
கேலக்ஸி எஸ்10 லைட் சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும்
வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications