Samsung Galaxy Note 10 Lite: அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் கேலக்ஸி நோட் 10 லைட் அறிமுகம்.!

|

இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மாரட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் ஜனவரி 30-ம் தேதி ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இதன் முன்பதிவு நாளை துவங்கும் என அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலை

அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலை

6ஜிபி ரேம் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.36,990-விலையில் விற்பனைக்கு வரும். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 லைட்

மாடல் ரூ.38,990-விலையில் விற்பனைக்கு வரும். மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ் பென் ஸ்டைலஸுடன் வருகிறது, பின்பு 1080 x 2400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனை விட குறைவான விலையில் ஐபோன் 9(ஐபோன் எஸ்இ2): ஆப்பிள் அதிரடி.!

 128ஜிபி உள்ளடக்க மெமரி

128ஜிபி உள்ளடக்க மெமரி

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் எக்ஸிநோஸ் 9810 பிராசஸர்

சாம்சங் எக்ஸிநோஸ் 9810 பிராசஸர்

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்ஸிநோஸ் 9810 பிராசஸர் வசதி உடன் மாலி-ஜி72 எம்பி18ஜிபியு ஆதரவும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம்

வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

விஸ்வரூப வெற்றி: இனி விண்ணுக்கு மனிதர்கள் தாராளமாக செல்லலாம்., எப்படி தெரியுமா?

12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்

12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 32எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4500எம்ஏஎச் பேட்டரி

4500எம்ஏஎச் பேட்டரி

கேலக்ஸி எஸ்10 லைட் சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 10 Lite Launched: Price in India, Specifications, Sale Date, Pre-Booking, and More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X