திடீரென சாம்சங் கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.4000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போன் மாடலை இப்போது ரூ.37,999-விலையிலும், 8ஜிபி ரேம்
மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போனை ரூ.39,999 விலையிலும் வாங்க முடியும்.

இது தவிர, வாடிக்கையாளர்கள் சிட்டி பேங்க் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வழியாக கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போனைவாங்கினால் ரூ.5000 கேஷ்பேக் பெறலாம், ஈஎம்ஐ சலுகை, YouTube பிரீமியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் ஜூன் 30, 2020 வரை
செல்லுபடியாகும்

6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ் பென் ஸ்டைலஸுடன் வருகிறது, பின்பு 1080 x 2400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்ஸிநோஸ் 9810 பிராசஸர் வசதி உடன் மாலி-ஜி72 எம்பி18ஜிபியு ஆதரவும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால்பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ்லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி நோட்10 லைட் சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும்
வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications