Home
Mobile

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் யுஐ 2 உடன் நிலையான ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பைப் பெறத் தொடங்கியுள்ளது.கண்டிப்பாக அடுத்த மாதம் இறுதியில் அனைத்து சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 10அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ்  சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 6.3' இன்ச் எச்.டி.ஆர் 10 பிளஸ் (HDR10+) டிஸ்பிளேயுடன் கூடிய S-Pen பயன்பாட்டுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.8' இன்ச் கொண்ட டைனமிக் அமோலேட் டிஸ்பிளேயுடன் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் தான் மிகப் பெரிய டிஸ்பிளே ஸ்கிரீன் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு போன்களிலும் டைனமிக் அமோலேட் டிஸ்பிளேயுடன் கூடிய எச்.டி.ஆர் 10 பிளஸ் சேவையுடன் கூடிய டைனமிக் டோன் மேப்பிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ்  சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!

இரண்டு புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் Exynos 9825 சிப்செட் பிரசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் மாடல் 4ஜி திறன் கொண்ட 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மாடாலகாவும், 5ஜி திறன் கொண்ட 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மாடலாகவும் வெளியாகியுள்ளது. பின்பு கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்
மாடல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி /512ஜிபி உள்ளடக்க மெமரி அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் கேமரா சேவை வழங்கப்பட்டுள்ளது, 12 மெகா பிக்சல் கொண்ட டெலி போட்டோ லென்ஸ் கேமரா, 12 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா மற்றும் 16 மெகா பிக்சில் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனில் இந்த கேமராகளுடன் சேர்த்து VGA டெப்த் விஷன் சென்சார் என்ற ஒரு சிறிய லென்ஸையும் ஃபிளாஷ் அருகில் பொருந்தியுள்ளது சாம்சங்.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ்  சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், 12W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 3500 எம்.ஏ.எச் பேட்டரியுடனும், சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் 4300 எம்.ஏ.எச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 10, Galaxy Note 10+ Start Receiving Stable Android 10 Update : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X