Home
Mobile

ஆகஸ்ட் 20: அசத்தலான சாம்சங் கேலக்ஸி நோட் 10 சிரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! (விலை & அம்சங்கள்)

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 10 சிரீஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் மாடல் இந்தியா முழுவதும் அதிக
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

கேலக்ஸி நோட் 10 சிரீஸ்  முன்பதிவு

கேலக்ஸி நோட் 10 சிரீஸ் முன்பதிவு

ஆகஸ்ட் 20-ம் சரியாக தேதி 11-மணி அளவில் இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 10 சிரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேலக்ஸி நோட் 10 சிரீஸ் முன்பதிவு ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி நோட் 10 விலை:

கேலக்ஸி நோட் 10 விலை:

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.69,999-ஆக உள்ளது, மேலும் ஆரா க்ளோ, ஆரா ரெட் மற்றும் ஆரா பிளாக் போன்ற வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

கேலக்ஸி நோட் 10 பிளஸ் விலை:

கேலக்ஸி நோட் 10 பிளஸ் விலை:

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 பிளஸ் சாதனத்தின் விலை ரூ.79,999-ஆக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் க்ளோ, ஆரா ரெட் மற்றும் ஆரா பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கும்

அசத்தலான டிஸ்பிளே:

அசத்தலான டிஸ்பிளே:

கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டைனமிக் AMOLED Infinity-O டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED Infinity-O டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

 இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிப்செட்:

இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிப்செட்:

இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சாம்சங் எக்ஸ்நோஸ் 9825 சிப்செட் உடன் மாலி ஜி76 எம்பி12ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, மேலும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 3500எம்ஏஎவ் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.
பின்பு கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் 4300எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட கேமரா:

எதிர்பார்க்கப்பட்ட கேமரா:

இரண்டு ஸமார்ட்போன்களிலும் கேமராக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன்களின் பின்புறம் முன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. அதில்
Variable aperture (f/1.5-2.4) உடனான 12MP அளவிலான முதன்மை கேமரா, 16MP அளவிலான Ultra wide-angle கேமரா மற்றும் 12MP அளவிலான Telephoto லென்ஸ் ஆகியவைகள் அடங்கும்.
பின்பு இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 10எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

நோட் 10 ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வைஃபை, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 10, Galaxy Note 10+ Launch in India on August 20 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X