Home
Mobile

இந்தியா வரும் சாம்சங் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன்!

By Super
இந்தியா வரும் சாம்சங் கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன்!

வாடிக்கையாளர்களை ஆவலுடன் ஏங்க வைத்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாக உள்ளது என்பது தான் மொபைல் உலகின் இன்றைய ஹாட் டாப்பிக். பொதுவாக புதிய மொபைல் இந்தியாவில் வெளியாகிறது என்ற உடன் வாடிக்கையாளர்கள் அதன் தொழில் நுட்பத்தினை பற்றி தெரிந்த கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.

அப்படி அனைவரின் ஆர்வத்தினையும் தூண்டிவிட்ட ஒரு ஸ்மார்ட்போன் கேலக்ஸி நெக்சஸ். இந்த புதிய ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. ஜனவரி மாதமே வெளியிடப்பட இருந்த இந்த ஸ்மார்ட்போன், வருகிற மார்ச் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.

கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன் அமோல்டு தொழில் நுட்ப திரை வசதி கொண்டது. இது 16 மில்லியன் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும். ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் எளிதாக இயங்கும். கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போன் மிக அகன்ற 4.65 இஞ்ச் திரையை வழங்கும்.

5 மெகா பிக்ஸல் கேமரா வசதி கொண்ட நெக்சஸ் ஸ்மார்ட்போன் 1.3 மெகா பிக்ஸல் செகன்டரி கேமரா வசதியினையும் கொடுக்கும். இதன் எல்ஐ-அயான் 1,750 எம்ஏஎச் பேட்டரி நீடித்து உழைக்கும் பேட்டரி வசதியை தரும்.

இந்திய மார்கெட்டில் இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரியாக தெரியவரவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X