பரபரப்பை ஏற்படுத்த வரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
பரபரப்பை ஏற்படுத்த வரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

எண்ணிலடங்காத பல படைப்புகளை படைத்து இருக்கிறது சாம்சங் நிறுவனம். கேலக்ஸி நெக்சஸ் எல்டிஇ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய முடிவெடுத்து இருக்கிறது சாம்சங். இது சிடிஎம்ஏ வசதி கொண்ட ஸ்மார்ட்போன்.

இதில் ஆற்றல்வாய்ந்த பிராசஸரும், சிறந்த ரேம் வசதியும் உள்ளது. இப்பொழுதெல்லாம் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் தொழில் நுட்பங்களை கொடுப்பதில் வல்லவர்களாக திகழ்கின்றன மொபைல் நிறுவனங்கள். இந்த கேலக்ஸி நெக்சஸ் எல்டிஇ ஸ்மார்ட்போன் நிச்சயம் அற்புதமான வசதிகளை

வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.

இதன் 5 மெகா பிக்ஸல் கேமரா 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை கொடுக்கும். சிறந்த புகைப்படத்தையும் இந்த கேமரா கொடுக்கும் என்பது இதன் துல்லியத்தை பார்த்தால் தெரியும். இதன் கேமரா 2592 X 1936 பிக்ஸல் சிறப்பான துல்லியத்தை இந்த ஸ்மார்ட்போன் மூலம் பெற முடியும்.

இதில் ஒரு கேமரா தான் உள்ளதா? என்று ஏமாற்றமாக கேட்க வேண்டாம். விஜிஏ செகன்டரி கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இந்த செகன்டரி கேமராவின் மூலம் வீடியோ கான்ஃபிரன்ஸிங் வசதியினையும் பெறலாம். இன்டர்நெட் வசிதயினை பெற இதில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி நெக்சஸ் எல்டிஇ ஸ்மார்ட்போன் 32ஜிபி இன்டர்னல் மெமரி வசதியை கொடுக்கிறது. இதனால் நிறைய தகவல்களை ஸ்டோர் செய்து கொள்ளலாம்.

கறுப்பு நிறத்தில் கண்கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாம்சங் கேலக்ஸி நெக்சஸ் எல்டிஇ ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் மொபைல் மார்கெட்டை வந்தடையும் என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.30,000 விலையில் இருந்து 40,000 விலை வரையில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்